உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பாடல்கள் 247 திளைப்பதற்குப் பதில் துன்ப வெள்ளத்திலேயே அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் வாழ்வு சிறக்க மனத்தில் உறுதி வேண்டும். ஒளி மின்னல் இளந்தமிழன் 1973, சூன் இதழில் வெளிவந்தது. காலுக்குக் கட்டை போட்டுவிட்டால் பையன் திருந்தி விடு வான் என்று பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்கிருர்கள் பெற்றேர். சில பிள்ளைகள் திருந்திவிடுகிரு.ர்கள். திருந்தாத பிள்ளைகள் - தங்கள் மனைவியருக்கு எவ்வளவு கொடும் பார மாகி விடுகிருர்கள். - அந்தப் பேதைப் பெண்களின் வாழ்வு எவ்வளவு அவலச்சுவை யுடையதாகி விடுகிறது என்று எண்ணியபோது எழுந்த கற்பனே இது. வங்கங் கடந்த மங்கை இளந்தமிழன் 1973 சூலை இதழில் வெளிவந்தது. பழக்க வழக்கத்தின் காரணமாக மனங்கொண்ட மங்கையரை உடனழைத்துச் செல்லாது, கடல் கடந்து தொழில் செய் "வார், அந்நாட்டுப் பெண்களைச் சேர்ந்து வாழ்க்கை நடத் துவதால் ஏற்படும் குடும்பத் துன்பங்களை எண்ணிப் பார்த்த போது எழுந்த கற்பனை இது. மன அலைகள் கடல் அலே களாகி வாழ்க்கை மரக்கலத்தை ஆட்டிப் படைக்கும் அரிய காட்சிகளை இக் கதையில் காணலாம். இருளகன்றிட ஒளிபெருகிட உரிமை வேட்கை 1973 பொங்கல் மலரில் வெளிவந்தது' தொழிலாளர் வேலை நிறுத்தங்களைத் தூண்டிவிட்டு, அவர் கள் அவல நிலையைப் பயன்படுத்தி இடைத்தரகு சட்டும் புல் லரிடமிருந்து மீள வேண்டும் என்ற கருத்தை உட்கொண்டு பாடியது. தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு புத்