பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 249 லும் பல பாச்சுவை நூல்களை எழுதி வெளியிட்ட திரு W.RM. செட்டியார் அவர்கள் இதற்கு ஒரு முன்னுரை வழங் கிச் சிறப்பித்ததோடு, தம்முடைய ஸ்டார் பிரசுர வெளி யீடாக ஏற்று விற்பனைப் பொறுப்பை மேற்கொண்டார்கள் இந்நூலின் கற்பனைச் சிறப்பைப் பல அறிஞர்கள் பாராட்டி னர்கள். ஒரு காவியத்திற்குரிய எல்லாத் தகுதிகளையும் பெற்று விளங்குகிறது இந்நூல். புத்தக வடிவில் வெளிவந்த போது எழுதப்பெற்ற பதிப்புரை, முன்னுரை ஆகியன : என் ஆசை நாரா நாச்சியப்பன் அவர்களின் கவிதைகளைப் 'பொன்னி'யில் பார்த்தேன். பார்த்து இப்படிப்பட்ட உயர்ந்த கவிதைகளைப் புத்தக உருவில் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. 'கொய்யாக் காதல்’ என்ற ஒரு சிறு காவியம் அவர் எழுதி வைத்துள்ளார் என்று அறிந் தேன். அதன் பயணுகக் கற்பனை வளங்கொழிக்கும் இந்நூல் புத்தகமாக உருவாயிற்று. 'சின்னமலர்க் கண் திறந்தான் சேவடிக்கீழ்ச் சிதறிய பூப் பல கண்டான்' என்பது அவர் கற்பனைக்கு ஒர் எடுத்துக் காட்டு. - ஸ்டார் வெளியீடாக வெளியிட ஒப்புக்கொண்ட திரு வி. ஆர் எம். செட்டியார் அவர்கட்கு எனது உளமார்ந்த நன்றி. தமிழகம் இதற்கு நல்வரவேற்பு அளித்து ஆதரிக்க வேண்டுமென்பது என் ஆசை. "ஒளி நிலையம்” - * * பலவான்குடி இராம. முத்துவீரப்பன்