உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 251 கிரு.ர்கள்; மனித அறிவின் திறமையில் மலரும் எந்தப் பொருளும் செயற்கைப் பொருள்தான் என்பது என் சித்தாந்தம். இந்த "என் செயலை'த் தமிழ் உலகத்தில் பரப்ப முன் வந்த தோழர் இராம. முத்துவீரப்பன் அவர்களுக்கும் திரு. வி. ஆர்.எம். செட்டியார் அவர்களுக்கும் என் நன்றி. நான் கவிதை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து என்னை ஊக்கப்படுத்தியும், ஆதரவு நல்கியும், தமிழ் நாட் டிற்குப் பொன்னி'யின் மூலம் என்னை அறிமுகப்படுத்தியும் வந்துள்ள என் அண்ணல்ர் முருகு, பெரியண்ணன் இருவர் திருமுன் என் செயலால் மலர்ந்த முதல் நூலாகிய இந் நூலைப் படைக்கிறேன். 10-4-48 - நாரா நாச்சியப்பன் இளவரசி முல்லை இளந்தமிழன் 1975 மார்ச் இதழில் வெளிவந்தது. ஒரு சிறு காப்பியமாகத் தொடங்கிய இந்நூல் அரை குறையாக நின்று விட்டது. தொடரும் என்ற குறிப்போடு பாதியில் நின்று விட்ட இக்கதை, இப்போது முற்றுப்பெற்று இப்புத் தகத்தில் இடம் பெறுகிறது. நூல் முழுவதும் ஒரே வகை யான எண் சீர் விருத்தத்திலேயே இயன்றுள்ளது. ஷேக்ஸ் பியர் காவியம் ஒன்றைப் படித்தபோது, அதுபோல ஒன்று எழுத வேண்டும் என்று தொடங்கி, முற்றிலும் வேருக முடிந்த ஒரு கதையைக் கொண்டு விளங்குகிறது. ஈரோட்டுத் தாத்தா 1948 ஏப்பிரல் மாதம் பொன்னி வெளியீடாக 4 அன விலையில் வெளி வந்த சிறு நூல், பெரியாரின் வரலாற்றுக்