பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 - நாச்சியப்பன் குறிப்புகளைக் கொண்டு அந்நாளில் அவர் பெருமை விளக் கும் நூலாக வெளிவந்தது. இந்நூலுக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தம் குயில் இதழில் ஒரு மதிப்புரை எழுதினர்கள். நெறிசூடி ஒளவையார் எழுதிய ஆத்திசூடியைப் போன்ற ஒன்று எழுதித் தருமாறு மணிவாசகர் நூலகம் பதிப்பாசிரியர் திரு ச. மெய்யப்பன் அவர்கள் வேண்டியவண்ணம் எழுதிக் கொடுத்த நூல் இது. புதிய ஆத்திசூடிகள் 12 என்ற தலைப் பில் 1980 ஆம் ஆண்டு சனவரியில் மணிவாசகர் நூலகம் வெளியிட்ட தொகுப்பு நூலில் இது இடம் பெற்றுள்ளது. நல்வழி 44. வெண்பாக்களைக் கொண்ட நாச்சியப்பன் நல்வழி' என்ற இந்நூல் 1960ஆம் ஆண்டு தென்றல் பொங்கல் மலரில் முழுமையாக வெளிவந்தது. தன்மான இயக்கத்தின் புதுக் கருத்துக்களை ஒட்டமான நடையில் ஆசிரியர் சிறந்த வெண் பாக்களாக இயற்றியுள்ளார். பிள்ளைத் தமிழ் இளந்தமிழன் 1973 சனவரி பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்தது. முன்னுள் ஆசிரியர்கள் மன்னர்களையும் தெய்வங்களையும் நூற்பொருளாகக் கொண்டு பிள்ளைத் தமிழ் இயற்றினர் கள். இந்நூலில் பிள்ளையையே நூற் பொருளாகக் கொண்டு பிள்ளைத் தமிழ் இயற்றப் பெற்றுள்ளது, பொதுப் பருவங்கள் ஏழும், ஆண்பாற் பருவங்கள் 3-ம் பெண்பாற் பருவம் 3-ம் ஆக 13 பருவங்களுக்கும் பருவம் ஒன்றுக்கு மூன்று அறுசீர் விருத்தமாக 39 விருத்தங்களைக் கொண்டது இச் சிறு நூல். இளந்தமிழன் பொங்கற் சிறப்பிதழில் இந் நூலுக்கு ஆசிரியர் எழுதிய முன்னுரை இது :