பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 253 முன்னுரை வாழ்வு தொடங்கிய நிலையில் ஒரு கணவனும் மனைவி யும் தங்களுக்கு ஒரு செல்வப் பிள்ளை வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே பிள்ளை பிறக்கும் முன்பாகத் தோன்றும் அறிகுறிகளே பெருமகிழ்ச் சியைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்தவையாம். பிள்ளை பிறந்தபின், அதைச் சீராட்டுவதிலும் பாராட்டுவதிலும் வாழ்வு இன்பநடை போடுகிறது. மனத்திற்கு இன்பஞ் சேர்க்கும் அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் பலவித மாகக் கொஞ்சிக் குலவுவதைக் காண்கிருேம். காலையும் கையையும் ஆட்டிக்கொண்டு போட்ட இடத் திலேயே கிடந்த குழந்தை குப்புறக் கவிழ்ந்து கொண்டதும் ஒரு குதுரகலம் பிறக்கிறது. அது வயிற்ருல் நகரத் தொடங் கும்போது புது மகிழ்ச்சி தோன்றுகிறது. அந்தச் சின்னஞ் சிறிய குழந்தை தவழுவதும், எழுவதும், ஆடுவதும் கை வீசு வதும், மழலைமொழி பேசுவதும், சிரிப்பதும் நடப்பதும் எல்லாம் புதுமையாகவும் இன்பமாகவும் இருக்கின்றன. சிற்றிளம் பருவத்தில் அக்குழந்தையின் செயல் நிலைகள் ஒவ்வொன்றையும் குறித்துப் பேசுதலும், கொஞ்சுதலும் பெற்ருேர்க்குப் பெரிதும் இன்பம் தருவனவாம். இந்த இயல்பை மனத்துட் கொண்டு முன்னைத் தமிழ்ப் புலவர்கள் பிள்ளைத் தமிழ் நூல்கள் பல இயற்றியுள்ளார்கள். பிள்ளைத் தமிழ்நூல் இயற்றிய பழம்பெரும் புலவர்கள், தாம் தாம் விரும்பி வழிபடும் தெய்வங்களில் ஒன்றைப் பிள்ளை நிலையில் வைத்துப் பாடியிருக்கிருர்கள். - அவர்கள் தம் அரிய நூல்களில் அத்தெய்வப் பிள்ளைகளை ஆடவும் பாடவும் வைத்தும், தாலாட்டியும் சீராட்டியும் பாராட்டியும் நீராட்டியும் மகிழ்ந்திருக்கிரு.ர்கள். பிள்ளைத் தமிழ் நூல்களிலே குமரகுருபர அடிகள் அருளிய மீனட்சியம்மை பிள்ளைத் தமிழ் கவினழகு வாய்ந்த