உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நாச்சியப்பன் நின்ருர் நெடுநேரம் வேறு நினைப்பின்றி குன்றனைய தோளானைக் கோபித்துக் கேட்டுவிட எண்ணி யிருந்ததெலாம் ஏந்திழையாள் தான்மறந்தாள் கண்ணுக்குக் கண்ணுன காதலனைக் கண்டுவிட்டால் பேசிக் களிப்பதல்லால் ஏசிப் பிரிவதுண்டோ? வாசிக்கும் புத்தகத்தை வாங்கி நெருப்பினிலே போட்டுக் கொளுத்துவதோ? பூவெடுத்துக்கொண்டையிலே சூட்டாமல் கல்லின்மேல் தூவிக் கெடுப்பதுவோ? குந்திக் குரலெடுத்துக் கூட்டமுதப் பாட்டிசையைச் சந்தப் படிபாடித் தண்டமிழின் இன்பத்தைக் காணுமல் கத்திக் கசப்படையச் செய்வதுவோ? ஆணழக ளுேடன்பால் ஆசைக் கதைபேசி வாழ்வின்பம் காணுமல், வந்தவனைத் தான்சினந்து பாழ்படுத்த லாமோ? பதைக்கப் புரிவதுவோ? இவ்வாறு வேறு நினைப் பேதும் மறந்தவராய்க் கவ்வும் இணைக்கண்ணில் காதல் ஒளிபெருக்கி நின்றிருந்த போது நிலவும் அமைதியினைக் கொன்றந்தச் சேயிழையாள் கூறத் தொடங்கிள்ை. சிந்தித்தாள்; தெரிவித்தாள் அத்தான்! மணியத்தான்! அன்பான என்னத்தான்! எத்தனைநாள் நாமும் இருந்திடுவோ மிவ்வாறே! கூடிச் சிரித்திருப்போம். கொஞ்சம் இருட்டிவிட்டால் வாடிப் பிரிந்திடுவோம், வாழ்க்கை தொடங்கவில்லை எத்தனைநாள் அத்தான் இனிப்பொறுக்கமாட்டேன்நான் சித்தந் துடித்தந்தச் சேயிழையாள் சொன்னதற்கே