உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் அன்புடையாய் என்றன் அமுதவல்லிப் பெண்ணே நாம் இன்பத் திருமணத்தை ஏற்றுக் குடித்தனத்தைச் செய்யத் துடிக்கின்ருய் செந்தா மரைமுகத்தாய் மெய்யாய் உரைக்கின்றேன், மேற்படிப்புத் தேர்வினிலே வெற்றியுற்ற பின்னே விழைகின்றேன் இல்லறத்தைப் பற்றுவிட்டேன் என்று பதைக்காதே! உன்னை அடையத் துடித்தாலும் என்றன் அறிவால் மடைப்பெருக்காம்அன்பைமறைத்துவைத்துவாழ்கின்றேன்! கல்வி முடிந்தவுடன் கட்டழகி தோள்களிலே நல்ல மலர்மாலை நாடும் மணமாலை போட்டுக் களிப்படைவேன் பொன்னை வாழ்க்கையிலே கூட்டும் பொருளெல்லாம் கொண்டுவந்து சேர்த்திடுவேன் கண்ணல்ல கட்டிக் கரும்பல்ல தண்டமிழின் பண்ணல்ல முத்தம் பதித்துவிடு என்றுரைத்தான். திரைப்படத்திற்கு அழைத்தாள் தேனனையாள் முத்தமிருக் கட்டும் முடிவும் இருக்கட்டும் இத்தினத்தில் உள்ளத் தெழுந்த ஆசையினைக் கூறுகின்றேன்; அன்பரே கூறி விடுகின்றேன்; மீறிப் பதிலுரைக்க வேண்டாம்நான் வேண்டுகின்றேன்! - இன்று திரைப்படத்திற் கென்னை உடன் அழைத்துச் சென்றுவர வேண்டும்; சிறியாள் விருப்பமிது! நாட்டிலுள்ள பெண்களெல்லாம் நாயகரின் கைகோர்த்துக் கூட்டுப் பறவைகள்போல் கூடித் திரைப்படங்கள் கண்டுவரும் காட்சியினைக் கண்டேன் மனத்தினுள்ளே கொண்டுவிட்ட ஆசையிது கூட்டிச்செல் வீரா