பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் காதல் துடிப்புணர்த்தும் கட்டழகி நெஞ்சிரண்டும் மோதும் அலைபோலே முன்ளுேக்கிப் பின்வீழ்ந்தே ஆடிக் கவலையுறும் அந்தநிலை கண்டானே சூடி யிருந்த மலர்சிரிக்கத் தோகையவள் - வாடும் மலர்முகத்தைக் கண்டானே நெஞ்சத்தில் ஓடிவரும் காதல் உணர்ச்சியினுல் மாதவளைத் தொட்டு முகந்திருப்பித் தோளில் அணைத்தபடி கட்டழகே என்னன்பே கண்ணிர் நிறுத்திவிடு பேசும் படங்கானப் பெண்ணே நீ இப்பொழுதே வா, சிரிப்பாய்! என்றுரைத்து வண்ண மலர்முகத்தின் நீரைத் துடைத்துவிட்டான்! நெஞ்சங் களித்தவளும் தோளைப் பிடித்துத் தொடர்ந்து நடந்தாளே! படங்கண்டாள்; காதல் மடங்கொண்டாள். புத்தம் புதுவயிரம் போல்மின்னும் புன்னகையின் முத்துப்பல் காட்டி முழுதுஞ் சிரிக்காமல் அண்ணல்கை கோத்தே அழகு மயில்போலே பெண்மானேர் காளையுடன் பேசி நடப்பதுபோல் சிங்கம் நடந்துவரச் சிற்றன்னம் தொடர்ந்துவரும் இங்கிதம்போல் தானும் இணைந்து நடந்தாள்! பத்தில் வருங்காதல் பார்க்கும் பொழுதில் மடப்பெண் அவள்செய்த மட்டற்ற செய்கையெலாம் ஈண்டுரைத்தல் காதல் இலக்கியத்திற் காகாதாம், தீண்டும் இரண்டுயிர்கள் தேர்ந்தநல் லின்பத்தைப் பாரறியக் கூறுவது பச்சை மொழியாகும் ஊரறியக் கூறல் உயர்ந்த செயலல்ல