உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் மாலைப் பொழுதுமுதல் மங்கையினைக் காணமல் வேலை புரியாமல் வீற்றிருந்த பெற்ருேரும் காரிருளே சூழ்ந்துவரக் கண்டனரே யல்லாமல் சேருமெழில் மாது திரும்பிவரக் காணவில்லை; அன்னை மனங்கலங்கி; யாதும் புரியாமல் என்னென்ன வோகேட்க ஏற்ற விடையின்றித் தந்தை புறப்பட்டார்; தாம்சண்ட பேரையெல்லாம் இந்த வழியில் எழிலான பெண்ணுெருத்தி செல்லக்கண் டீரோ! என் செல்வத்தைக் கண்டீரோ சொல்லுமெனக் கேட்டுத் தொடர்ந்து வழிதேடிக் காவல் நிலையத்தும் கால்வைத்து மேலேறித் தாவி யதிகாரி தம்முன்னே போய்நின்றே ஐயா பெரியவரே! அன்புடனே நான்பெற்ற கொய்யாப் பழமனையாள் கொப்பு மலரனையாள் பண்புடனே நான்வளர்த்த பச்சைத் கிளியனையாள் கண்ணின் மறையாமல் காவலிட்டுக் காத்திருந்த பூத்த மலர்ப்பாவை போனவள்தான் மாலையிலே காத்திருந்து காத்திருந்து கண்ணிரண்டும் பூத்தனவே! தேடியலைந் தென்றென் செருப்புகளும் தேய்ந்தனவே! ஒடிவிடு வாளென் றுரைப்பதற்கோர் காரணமும் இல்லை அவள்விருப்பம் ஏதும் மறுத்ததில்லை. நல்லொழுக்கம் அன்பு நடத்தையிலே கோணுமை கொண்ட குலக்கொடியை கொத்தும் பருவத்தைக் கண்ட பழக்குலையைக் காணவில்லை; யாரேனும் மின்னும் விழியாளை வீதி வழிமறித்துச் சென்றிருக்க லாமென்று சிந்தை கலங்குதையா!