உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாச்சியப்பன் வாழ்க்கை நடத்த வரும்பருவம் கண்டதுமே தாழ்க்கா தொருவன்கைத் தாலிக்குப் பெண்ணிவளின் சந்தனத்துச் செங்கழுத்தைத் தத்தமிட்டு வைத்திருந்தால் இந்தத் துயரமில்லை; இப்பொழுதே எப்படியும் தேடிப் பிடித்துவந்தால் செய்நன்றி நான்மறவேன் கூடிக் களித்திருக்கக் கோதைக்கோர் நாயகனைப் பார்த்து மணமுடித்துப் பாரம் ஒழித்திடுவேன் வார்த்தைபல சொல்லி வளர்த்துவிட்டேன் மன்னிப்பீர். பேரும் மலையப்பன்; பெற்றெடுத்த தந்தையென்றன் ஊரும் திருவரங்கம்; ஒடிநான் தேடுகின்ற பெண்ணும் அமுதவல்வி ஐயா பெருமனது பண்ணி யவளைப் பலவிடத்தும் தேடி அழைத்துவர வேண்டுகின்றேன்; அன்பு மனைவி பிழைத்திருக்கவேண்டுமெனில்பெண்திரும்பவேண்டுமையா! என்று பலப்பலவாய் ஏங்கி மலையப்பர் கன்றிழந்த தாய்ப்பசுவாய்க் காவல் நிலையத்தில் நின்று புலம்புகையில் நீர்விழியில் ஊற்றெடுக்க ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து விட்டவரைக் கண்டும் அதிகாரி கண்கலக்கம் கொள்ளாமல் தொண்டு கருத்தாகித் துள்ளிச் சலாமிட்டு நின்று பணிகேட்கும் நேர்மையுள்ள காவலரில் நன்ருெருவர் தம்மை வரவழைத்துக் காணுத பெண்ணின் அடையாளம் பிழையாமல் கூறியவள் வண்ண உடைக்குறிப்பும் வந்திருந்த தந்தையினைக் பருவமழைபோல் பாவை வந்தாள் - கேட்டுக் கிளத்தியெங்கும் தேடிவரத் தாம்பணித்தார். வாட்டமுற்ற நெல்லுக்கு வாய்க்காலில் தண்ணீரைப்