உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 11 பாய்ச்சும் வழியாயும் போதில் பருவமழை வாய்ந்த நிலைபோல வந்தாள் அமுதவல்லி! காதல் மணியனுந்தான் காதலியின் பின்வந்தான் சேதி யறிவோனும் சேர்ந்தங் கதிகாரி முன்னே வணக்கம் மொழிந்துவிட்டுக் காதலரைத் தன்னே டழைத்துவந்த காரணத்தைச் சாற்றிநின்ருன். எண்ணுத போதில் எதிர்நிற்குந் தந்தையினைக் கண்ணுலே கண்ட அமுதவல்லி மெய்மறந்தே அப்பாவென் ருேடி அவர்தோளிற் சாய்ந்தாளே! எப்பாலுந் தேடி யெதிர்பார்க்கும் செல்வத்தைத் தன்முன்னே கண்டெடுத்த தந்தையும்தான் இன்னமுதம் அன்னவளைத் தாங்கி யகமகிழ்ச்சி கொண்டாரே! என்ன வருமோ எதுவருமோ என்றேங்கி நின்ற மணியனைத்தன் நேரில் அழைத்தந்தக் காவல் அதிகாரி கண்ணில் சினம்காட்டி யாவும் மனந்தெளியக் கேட்டறிந்தார்; அப்போதே கொண்ட சினந்தாழ்ந்து கூடும் கருணையினல் செண்டுமணம் போலுறவு சேர்ந்தவிரு நெஞ்சுகளின் அன்பின் திறமறிந்தார்; ஆதரவு தான்காட்டி இன்பம் வளர்த்துவிட எண்ணமிட்டார் அன்புளத்தால். அதிகாரி சொன்ன அன்புவழி தந்தை மலேயப்பர் தம்மை யழைத்தருகே சொந்தக் கருத்தொன்றைச் சொன்னர் அதிகாரி. பெற்ற திருமகளின் பேரன்பைக் கொண்டவனுய்க் கற்றவனாய் நல்ல கருத்துடைய பேர்வழியாய்ச்