உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தாச்சியப்பன் சிந்தித்தே எந்தச் செயலும் புரிபவளுய் சிந்தையிலே உம்பெண்ணைச் சேர்ந்திருக்கும் காதலளுய்த் தோன்றும் மணியன் துணையானுல் உம்பெண்ணும் ஆன்ற புலவர்களும் அன்புத் தமிழும்போல் ஊன்றி மணவாழ்வில் ஒற்றுமையாய் வாழ்ந்திடுவார். மான்விழியார் அன்பு மனம்வைத்த காதலரைத் தாம்பிரிய நேரிட்டால் தன்னந் தனியாகித் தேம்பி யழுதுலகில் தேய்ந்தெலும்புக் கூடாகி வாழ்வில் நடைபிணமாய் வாடித் திரிவதின்றி மீளத் திருமணத்தால் மேன்மையுறக் கண்டதில்லை. உள்ளம் பொருந்தி ஒருவனைத் தாம் கூடிவிட்டால் வெள்ளம்போற் செல்வம்; விதவிதமாம் இன்பங்கள் காட்டி யழைத்தாலும் கண்திருப்ப மாட்டார்கள்; கூட்டுக் கிளிபோலக் கொண்டடைத்துத் தாலியினை வேருெருவன் கட்டி, விரும்பிஎதிர் நின்ருலும் மாறுபட்ட வாழ்வை மதித்துவிட மாட்டார்கள். கட்டாய மாய்த்தாலி கட்டுமண வாளனிடம் பட்டாடை கட்டிப் பகட்டிச் சிரித்தாலும் கற்பில் வழுவாத கன்னியருஞ் சிற்சிலரே மற்றந்த வாழ்வும் மனமகிழ்ச்சி சேர்ப்பதில்லை. காதல் உளத்துக் கணவனைத்தாம் கைப்பிடித்த மாதர்க்குக் கற்பே மதிப்புடைய சொத்தாகும். ஆதலினுல் வாழ்வில் அவர்போல் களிப்பவர்கள் மேதினியில் வேறில்லை; மேன்மை பிறிதில்லை, உள்ளத்தில் பட்ட துரைத்தேன் பெரியவரே தெள்ளத் தெளிந்தும் கருத்தைத் தெரிவித்தால் காதலித்த நெஞ்சினரின் கண்ணில் மகிழ்ச்சியெனும் சோதி பெருகிவரும் சுந்தரமாம் காட்சியினை