பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மெனினும், பகத்சிங் கொள்கைக்குக் காலமும், இடமும் நடப்பும் விரோதமில்லை என்றும், பொருத்தமாய் உள்ளதென்றும் சொல்லுவோம் ஆனால், அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட மூறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றியபோதிலும், அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம். அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக்கொள்கையுமாகும்.

பகத்சிங் நடந்துகொண்டது சரிதான்!

உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருந்து இருப்பாரேயானால், கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்கவேண்டியதென்று நாம் சொல்லுவதோடு, அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால், நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில், நாமறிந்தவரை திரு. பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கிறோம். இதற்கு உதாரணம் என்னவென்றால், திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது. “பொது உடைமைக் கட்சி அதிகாரம் பெற்று, ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது; அது பகிரங்கமாகவும், ரகசியமாகவும் நடந்துதான் தீரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும், அவர் கடவுள் விஷயத்திலும், “எல்லாம் கடவுள் செயல்” என்பதிலோ, நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, அவரது இந்தக் கொள்கையானது எந்தச் சட்டத்தின்-