பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

படியும் குற்றமாகக்கூடியது அல்லவென்றும், ஆவதாயிருந்தாலும்கூட யாரும் பயப்படவேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கிறோம். அந்தப்படி ஒருசமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனி மனிதனிடமாவது, தனி வகுப்பினிடமாவது, தனி தேசத்தினிடமாவது துவேஷம் இல்லாமலும், எந்தத் தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும், நம்மை எவ்வளவு தூரம் வேண்டு மானாலும் கஷ்டப்படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டுதான் இக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால்தான் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகின்றோம்.

தீண்டாமையும், ஏழ்மையும் !

இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மையை ஒழிக்கவேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது.

தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல் ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்துதானாக வேண்டும் என்கின்றோமோ, அதுபோலவேதான் ஏழ்மைத் தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித்தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும் என்கின்றோம். ஆகவே, இந்தத் தீன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை, பொது உடைமைத் தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள். ஆதலால், இக்கொள்கைகளை நியாயமானவையென்றும், அவசியமானவையென்றும் கருதுகின்ற ஒருவன், காங்கிரஸ் ஒழிக ! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே தோன்றவில்லை. ஆனால், “நாங்களும் இதே கொள்கையைத்தான் கொண்டவர்கள்” என்று சொல்லிக் கொள்ளுபவர்கள், “காங்கிரசுக்கு ஜே.”, “காந்திக்கு ஜே”