பக்கம்:நாவல் பழம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்டில் எப்போதாவது தண்ணிர் வரும் வைகை நதிக்கரைக் கோவிலைத் தாண்டிப் போனால்... "ஒரு மரமே' தோப்பானது போல ஒரு பெரிய ஆலமரம். கீழே நிழலில் மயங்கும் மணல்வெளி, முதல் காதலின் போதைத் தனமான குறும்புகளை யாருமற்ற தனிமையில் நினைவுகளில் தரிசிப்பதைப் போல...ஏதோ ஒரு நாவலுடன் நான் அமர்ந்திருப்பேன். அப்போது பறவைகள் தலையில் எச்சமிட்டாலும், எழுதந்துப் பன்னீர்ப் பூக்கள் இதயத்தில் உதிர்கிற மெளனத்தில் சங்கமிப்பேன்.

எங்கள் ஊருக்கே ஒரு பெரிய கொசு வலையாகப் போடவேண்டும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.எங்கள் பக்கத்தில் பகலில் கிடைக்கும் மருந்து போன்ற சாப்பாட்டையும், இரவில் கிடைக்கும் கொசுக் கடியையும் நினைத்துக் கொண்டு "நாங்கள் பகலெல்லாம் மருந்து சாப்பிடுகிருேம். இரவெல்லாம் ஊசிபோட்டுக் கொள்கிரோம்' என்று ஒரு கவிஞன் எழுதினான்.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/10&oldid=1064776" இலிருந்து மீள்விக்கப்பட்டது