பக்கம்:நாவல் பழம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த மாணவப் பருவத்தில் அப்பாவின் மெத்தை போடப்பட்ட கொசுவலைக் கட்டிலில்... அந்த கால கட்டத்தில் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் விசிறி இழுக்கும் ஆளைப்போல...மரப்பலகையில் பட்டுத் துணி வைத்துத் தைக்கப்பட்டு, கயிறுகட்டி, கட்டிலின் மேற்கூரையில் உருளைகளில் பிணைக்கப்பட்ட விசிறியை இடது கையால் இழுத்தபடி ஒய்வு கொள்ளும் நேரங்களில் சுய மரியாதை இயக்கவாதிகள், கம்யூனிஸ்டுகள் ஆகிய எனது இரண்டு கண்களைப் போன்ற நண்பர்கள் "இரு துருவம்' நாவலைத், தந்தபோது அவர்களை உடனே அனுப்பிவிட்டு, நான் அவர்களின் உடனிருப்பிலிருந்து அகன்று வேரொரு துருவமாகி... அந்த நாவலை மெளனமாகப் படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த எழுத்துக்களில்...எனது விழிப்பின் கனவுகளில் நான் உறைந்துபோய்விடுவேன்.

நினைக்கும்போது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. கதை கேட்கும் பருவமும், கதை படிக்கும் பருவமும் முற்ருகவே வேறுபடும் காலமுரண்பாடு சுவையாகவும் இருக்கிறது.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/11&oldid=1064871" இலிருந்து மீள்விக்கப்பட்டது