உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவுக்கரசர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாவுக்கசர்ர்

ஊசலையாடி யங்கொண் சிறையன்னம்

உறங்க லுற்றால்

பாசறைகிலம் பருகிய வண்டு பண்பாடல் கண்டு

வீசுங்கெடில வடக ரைத்தே

எங்தைவி ரட்டமே. (1)

பைங்கால் தவளை பறை கொட்டப்

பாசிலை நீர்ப்படுகர் அங்காற் குவளைமேலா வியுயிர்ப்ப

அவரருகு உலவும் செங்காற் குருகிவை சேரும்

செறிகெடிலக் கரைத்தே வெங்காற் குருசிலை வீரன் அருள் வைத்தவீ ரட்டமே. (2)

என்பன முதல் இரண்டு பாடல்கள். இவற்றில் இயற்கை வளம் அழகாகக் காட்டப்பெறுகின்றது. கெடில நதியில் அலைகள் மின்னி வீசுகின்றன. அலைகளின் ஊசலாட்டில் அன்னம் உறங்குகின்றது. பசிய இலையுடைய நீல மலரி விருந்து வண்டுகள் பண்பாடுகின்றன. அருகில் செங்காற் குருகு கரையில் வந்து சேர்கின்றது’ என்கின்றார். 8,9,10 ஆம் பாடல்கள் இப்பதிகத்தில் காணப்பெறவில்லை.

கோணன் மாமதி (5.53) என்ற திருக்குறுந்தொகைச் செந்தமிழ் மாலையில்,

கோணன் மாமதி சூடியோர் கோவணம் நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. (1) என்பது முதல் பாடல். வளைந்த பிறைசூடி, கோவணம் அணிந்து விரும்பியும் பயனற்ற நாணமில்லாத வாழ்க்கை யுடையவனெனினும், வீணையில் பாடல் பயின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/93&oldid=634450" இலிருந்து மீள்விக்கப்பட்டது