உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவுக்கரசர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை ஈடுபாடு 5

சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?: என்கின்றார். இதுபோலவே எல்லாப் பாடல்களுமே கண்துயில் கொள்ளுமோ?’ என்னும் ஈற்றடியுடன் இறு கின்றன.

“எட்டு நாண் மலர்’ (5.54) என்ற குறுந்தொகைப் பதிகமும் இத் திருத்தலம்பற்றியதே.

உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டிடத் திரைகள் போல்வரி வல்வினைத தீர்ப்பரால் வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே. (7)

என்பது ஏழாவது திருப்பாடல். எட்டு மலர்களைக் கொண்டு ஈசனை வழிபட்டால் எல்லா நலன்களையும் பெறலாம் என்பதை எல்லாப் பாடல்களுமே தெரிவிக்கின்றன.

‘சந்திரனை மாகங்கை’ (6.4) என்ற முதற் குறிப்பு டைய செந்தமிழ்த் திருத்தாண்டக மாலையில் பத்தாவது பாடல் இலக்கிய நயம் செறிந்தது.

எழுந்ததிரை தித்திவலை நனைந்த திங்கள்

இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி

கொங்கையினை அமர்பொருது கோலங் கொண்ட தழும்புளவேல் வரைமார்பில் வெண்நூ லுண்டே

சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணிற் றானே

அவனாகில் அதிகைi ரட்ட னாரே. (10)

கங்கையின் அலைத் துளிகளில் நனைந்த இளந்திங்களைச் சூடிய வளர்சடையன் பவளம் போன்ற செங்கனி வாயினை யுடைய உமையவ ளின் தனத் தழும்புகளும் வெண்ணிறும் சந்தனமும் உடைய மார்பினன் எவனோ அவனே அதிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/94&oldid=634451" இலிருந்து மீள்விக்கப்பட்டது