உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நினைவு அல்ைகள் மேற்கூறிய வண்ணம் முதல் அமைச்சர் காமராசர் உரையாற்றி என்னைத் தடுத்தாட்கொண்டார். எனக்கு ஒரளவே பழக்கமான சர் தியாகராயர் கல்லூரி இவ்வகையில் என்னைச் சிறப்பிக்க, மற்றவர்கள் போட்டியிட்டு. கொண்டு பெருமைப்படுத்தினார்கள். கொடியாலம் அரங்கசாமி அய்யங்கார் திருவரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா விற்குத் தலைமை தாங்க என்னையும் பரிசுகள் வழங்க என் வாழ்க்கைத் துணைவியாகிய காந்தம்மாவையும் அழைத்தார்கள். அப்போது, திருச்சி மாவட்டப் பெரியார்களில் ஒருவரான கொடியாலம் கே. வி. அரங்கசாமி அய்யங்கார், அந்தப் பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர். இந்த நூற்றாண்டின் இருபதுகளில் அவர் தமிழ்நாட்டுக் காங்கிரசில் முன்னணியில் இருந்தார். - அவரது இல்லத்தில்தான் ராஜாஜி, ரங்கசாமி அய்யங்கார், ஈ.வெ.ரா. போன்றவர்கள் கூடி, காந்திஜியின் திட்டங்களை ஆதரிக்கும் முடிவை மேற்கொண்டார்கள். வயதிலும் நிலையிலும் தொடர்பிலும் என்னைவிட எவ்வளவோ உயர்ந்த அப் பெரியவர் எனக்கு ஆள் உயர மாலையிட்டுக் கை குலுக்கி வரவேற்றதை முப்பத்துமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது. பின்னரும் அவர், அந்தப் பள்ளியில் என்னைப் பலமுறை வரவேற்றுப் பெருமைப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும், இரண்டொருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, காந்தம்மாவோடு தம் பங்களாவில் தங்கி நலம் பெறும்படி அழைத்தார். அது கைகூடவில்லை. இருப்பினும் அவரது இயற்கையான அன்பினை எண்ணி மகிழ்கிறேன். 8. கல்வியின் உண்மை நிலை பொது ஊழியர்கள் ஒரு சாதிக்குரியவர்கள் அல்லர், தத்தம் சமயத்தின் துரதர்களும் அல்லர் எந்த அரசியல் கட்சிக்கும் தொண்டர்களும் அல்லர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/102&oldid=787887" இலிருந்து மீள்விக்கப்பட்டது