பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயியின் உண்மை நிலை -- E3 அவர்கள் பிறந்தது எச் சாதியில் ஆயினும், பின்பற்றுவது எச் சயத்தையாயினும், விரும்புவது எக் கட்சியை ஆயினும் பொதுப் பதவிகளில் இருக்கும் வரையில், எல்லாப் பிரிவினரின் நம்பிக்கைக்கும் உரியவராக இயங்க வேண்டும். மேற்படி நெறியை எனக்கு நானே வகுத்துக் கொண்டேன். செங்குத்தான அவ் வழியில் விழிப்பாக நடந்தேன். எனவே, பார்ப்பனரல்லாதார் நடத்தும் கல்விக் கூடங்கள் பெருமைப்படுத்தியதுபோல், பிராமணர்களால் நடத்தப்படும் நிறுவனங்களும் எனது கல்வித் தொண்டிற்கு வாய்ப்பளித்தன. கிறித்துவப் பள்ளிகளும், இசுலாமியப் பள்ளிகளும் என்னை வரவேற்றன; பெற்றோர்களைக் கூட்டின. கல்வி பற்றிய எனது கருத்துகளைக் கேட்டு அறிய உதவின. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். கத்தோலிக்க திருச்சபையால் தேவகோட்டை நகரில், "டிபிரிட்டோ உயர்நிலைப் பள்ளி' என்னும் பெயரில் ஒரு தரமான கல்விக்கூடம் நடந்து வந்தது. அது, இப்போது மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது. அதன், அப்போதைய தலைமை ஆசிரியர், அருள்திரு. மச்சாது (Machodo) சாமியார் என்பவர்.அவர், பின்னர் திருச்சி, புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக உயர்ந்து வந்து நற்றொண்டு புரிந்தார். கல்வித் தொண்டில் பழுத்த பழமாகிய மச்சாது சாமியார் இப்பொழுது, இலயோலா கல்லூரி வளாகத்தில் திருச்சபை உறையுளுள் தங்கி அமைதியாக ஒய்வு எடுத்து வருகிறார். இப்போதும் கல்வித் தொண்டை அடியோடு அறுத்துக் கொள்ளவில்லை; தொடர்பு கொண்டிருக்கிறார். அருள்திரு. மச்சாது தாம் தலைமை தாங்கி நடத்திவந்த 'டி.பிரிட்டோ பள்ளிக்கு அழைத்தார். அப்பள்ளி விழாவோடு, நகரப் பள்ளிகளின் குழந்தைகள் நாள் - பிரதமர் நேருவின் பிறந்த நாள் கொண்டாடவும் மச்சாது சாமியார் ஏற்பாடு செய்து இருந்தார். அந்த விழாக்களுக்கு என்னையும் என் மனைவி காந்தம்மாளையும் மகன் திருவள்ளுவனையும் அழைத்தார். எனக்கு இட்ட கட்டளை, பேச்சு. காந்தம்மாவின் பணி, பரிசளிப்பு, திருவள்ளுவனின் தொண்டு, இந்திய நாட்டுக் கொடியை ஏற்றி வைத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/103&oldid=787888" இலிருந்து மீள்விக்கப்பட்டது