பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 — Hæsta Sessé திட்டமிட்டபடி மூவரும் கலந்துகொண்டோம்: முழு நாளும் வேலை வாங்கினார்கள். நிகழ்ச்சிகள் அனைத்தும் செம்மையாக நடந்தன. நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட பெற்றோரும் மற்றோரும் எழுச்சி + கொண்டார்கள். கல்வியின்பால் ஆர்வம் காட்டத் தலைப். பட்டார்கள். தேவகோட்டை நிகழ்ச்சிகள் பற்றியே பலரும் பாராட்டினர். == அப் பகுதி ஆய்வாளர் திரு. டி. எம். காந்திமதியின் ஆர்வமும் ஆற்றலும் செயற்பாடும்போற்றத்தக்க வகையில் சிறப்பாக இருந்தன. ஒய்வுபெறும்வரை அவரது பணி மகோன்னதமாகவே விளங்கிற்று. - o - - அவரும் அருள்திரு மச்சாதுவும் உடன்பிறந்த இரு கைகள் எனச் செயல்பட்டனர். -- - திருநெல்வேலி மாவட்டத்தில் நாசரேத் என்ற ஓர் ஊர் இருக்கிறது. அது கிறித்துவப் பேரூர். அங்கே புராடெஸ்டென்ட்' திருச்சபையின் சார்பில் சிறந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியும் பெண்கள் பள்ளியும், பயிற்சிப் பள்ளியும் நடந்து வந்தன. நாசரேத், ஆண்கள் உயர்நிலைப் பள்ளி என்னை அழைத்துச் சிறப்பாக விழா எடுத்தது. பல ஊர் கிறித்துவக் குருமார்களும் குழுமியிருந்தார்கள். ஊரே திரண்டு வந்து கலந்துகொண்டது. நாசரேத் கல்வி விழாவும் எனது பேச்சும் அம் மாவட்டம் முழுவதும் பேசப்பட்டது. மற்ற கல்வி நிலையங்களும் அப்படிச் செய்யத் தூண்டின. . இசுலாமியக் கல்வி நிலையங்களும் எனக்கு நேசக்கரம் நீட்டி விழாக்களுக்கு அழைத்தன. அவ்வப்போது கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவின கல்வித் துறைக்கு முழு ஒத்துழைப்பு தந்தன. + --- * . * வடஆர்க்காடு பேரணாம்பட்டில் நடந்துவரும் முசுலீம் உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்தார்கள். - திரு. முகமது அன்வர் அவர்களின் மாமனார் அப் பள்ளியின் தலைவர். , -- அவர் வீட்டில் பகல் உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் தாவர் உணவு மட்டுமே உண்பவன் என்று முன்னதாக அவர்களுக்கு அறிவித்து இருந்தேன். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/104&oldid=787889" இலிருந்து மீள்விக்கப்பட்டது