பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lിങ് உண்மை நிலை 65 எனக்காக அவர்களும் அவ் வேளை தாவர உணவே அ வரி டார்கள். அக்கம்பக்கத்துப் பள்ளிக் கூடங்களை நடத்துபவர்களும் அதில் கலந்து கொண்டார்கள். தொடக்கம் முதல், ஒய்வு பெறும் வரையில் நான் பlகொண்ட பயண அளவு, சில மாநில அலுவலர்களே சென்று பிருப்பார்கள். பள்ளிகளின் அவல நிலை 'ஒரு நாளைக்கு ஒரு நிகழ்ச்சி என்பது என் அலுவல் வாழ்க்கை அறியாததாம். மூன்று நான்கு நிகழ்ச்சிகள் சாதாரணம். அப்படிச் சுற்றியதால் - பல பள்ளிகளைப் பார்த்ததால் - கல்வி நிலையங்களின் உண்மையான நிலைமையை என்னால் நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு முடிந்தது. ஆசிரியர்களின் குறைகளை நேருக்கு நேர் கேட்டறிய படி நீதது. முடிந்த வரையில் ஆங்காங்கே, விவரங்களைத் தீர்க்க முடிந்தது. நிர்வாகிகளோடோ, ஊராரோடோ ஏற்படும் கருத்து ாறுபாடுகள் கிளர்ச்சிகளாகவோ, போராட்டங்களாகவோ பேருருவம் எடுக்காமல் தடுக்க முடிந்தது. பள்ளிகளைப் பார்த்து நேரில் அறிந்து கொண்டது என்ன? மலைப்பைத் தரும் குறைபாடுகள், எல்லா வகையான குறைபாடுகளும் தென்பட்டன. போதிய இடவசதியில்லாத பள்ளிகள் நூற்றுக்கு அறுபதற்கும் பல். கழிப்பிடம் இல்லாதவை நூற்றுக்குத் தொண்ணுாறுபோல்; குடி நீர் உள்ள பள்ளிகள் நூற்றுக்கு முப்பது முப்பத்தைந்தே இருந்தன. குடிநீர் ஏற்பாடு செய்யாதவை அறுபத்தைந்து விழுக்காடு, விளையாட்டுத் திடல்கள் உள்ள பள்ளிகளும் மிகச் சிலவே இருந்தன. நூலகங்கள் இல்லாத தொடக்கப் பள்ளிகள் என்பது எண்பத்தைந்து விழுக்காடு என்று சொல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/105&oldid=787890" இலிருந்து மீள்விக்கப்பட்டது