உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் உண்மை நிலை 67 எனக்கு வந்த கூட்டம் அக் காலத்தில் தமிழில் உரையாற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கட மிகச்சிலரே. அத்தகையோரை எப்போதோ ஒர் முறைதான் பொதுமக்கள் கண்டு கேட்டு வந்தார்கள். தமிழ் பேசத் தெரிந்தவர்கள் கூட கல்வி நிலையங்களில் ஆங்கிலத்தில் உரையாற்றுவதே முறை என்றும், பெருமை என்றும் கருதிய காலம் அது. தமிழிலே பேசும் மாநிலக் கல்வி அலுவலர் ஒருவர் வருகிறார் வன்ற வியப்பில் கூடுவோர் பலர். 'ஏழை பங்காளர் காமராசரின் நம்பிக்கைக்கு உரியவரைக் காண வேண்டும் என்று வரும் கூட்டம் ஒருபால் பெரியாருக்கு வேண்டியவர், எப்படி வரவேற்கப்படுகிறார் என்று காணவந்தோர். சாதாரண மக்கள். இப்படிப் பல தரப்பினரும் வருவார்கள். அதனால்தான் நான் கலந்து கொண்ட கல்வி நிகழ்ச்சிகளுக்கு வரும் கூட்டம் பெரிதாக இருக்கும். மணிக்கணக்கில் அவையாரோடு பேசவேண்டுமெனும் அவா கொள்வேன். ஆனால், ஒரே நிகழ்ச்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட வரவேற்பு (இதழ்கள் படித்துக் கொடுப்பதில் நேரத்தைக் கொள்ளை கொள்வார்கள். அத்தகைய வரவேற்பே பாடலாக அமைந்துவிட்டால் மேலும் பல மணித்துளிகளை எடுத்துக் கொள்ளும். முதலில் மக்கள் இழுக்கிற இழுப்பிற்குப் போனால், பிறகு, நான் சொல்லுகிறபடி அவர்கள் நம்முடன் இணைந்து நடப்பார்கள் என்று நம்பினேன். அகத்தின் சினத்தை உள்ளேயே அடைத்துவிட்டு, முகத்தில் புன்முறுவலை வரவழைத்துக் கொள்வேன். சிர்காழி சி. முத்தையா பிள்ளை ஒருநாள், சீர்காழி வட்டத்தில் =#|T]] நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார், அத் தொகுதியின் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் திரு சி. முத்தையா பிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/107&oldid=787892" இலிருந்து மீள்விக்கப்பட்டது