பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5B நினைவு அலைகள் சீர்காழித் தொகுதி பொதுத்தொகுதியாக இருந்தவரை திரு. சி. முத்தையாவே மீண்டும் மீண்டும் சட்ட மன்றத்திற்குத் தேர்ந்: தெடுக்கப்பட்டார். - இவர் கட்சி மாறாதவர். தொடக்கம் முதல் காங்கிரசிலேயே இருப்பவர், வீட்டுப் பணத்தைச் செலவு செய்து பொதுத் தொண்டு ஆற்றுபவர். மாற்றுக் கட்சிகளோடு போட்டி போட்டாலும் பகைமை பாராட்டாதவர்; எல்லோரையும் அரவணைத்துக் கொள்பவர்; காழ்ப்பின்றிப் பலருக்கும் உதவும் நல்லவர் வல்லவர். எனவே, அவர் ஆறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது எளிதாக இருந்தது. காலையில் கடற்கரை ஊராகிய திருமுல்லை வாயலில் தொடங்கியது: இரவு சீர்காழியில் முடிந்தது. வரவேற்பு மடல்கள் ஆறு நிகழ்ச்சிகளிலுமாகப் பதினெட்டு வரவேற்பு மடல்களுக்குச் செவிசாய்க்க நேர்ந்தது. அன்று காட்டிய பொறு: மையைப் பாராட்டி ஆசிரியர்கள் ஆக்கப் பணிகளுக்குத் துணை நின்றார்கள். * பள்ளிக்கல்வியை விட்டுப் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகும், பழைய பாசமும் பற்றும் உடையவர்களாக விளங்குகிறார்கள். 1984ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் நாளை நான் வரவேண்டு. மென்பதற்காக, என் வசதியை முன்னிட்டு 10, 9. 1984க்குத் தள்ளி வைத்தார்கள். நான்கு நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தித் தந்தார்கள். பாராட்டுகளை ஏன் ஏற்றேன் அவற்றில் சரியாகவோ மின்கயாகவோ சொல்லிய சிறப்புகளையும் பாராட்டுகளையும் எப்படி ஏற்றுக் கொண்டேன்? “உங்கள் வரவேற்பு இதழ்களில் என்னிடம் இருப்பதாகச் சில சிறப்புகளைச் சொல்லி இருக்கிறீர்கள். “அவை விரும்பத்தக்க, சிறப்பான தன்மையாய் இருப்பதால் அல்லவா அவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறீர்கள். “நல்லோரே, சான்றோரே, சமத்துவப் பண்பாளரே என்று என்னைப் போற்றும்போது நானும் கேட்டேன்; அவையோரும் கேட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/108&oldid=787893" இலிருந்து மீள்விக்கப்பட்டது