பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் உண்மை நிலை 69 "மேற்கூறிய தன்மைகள் விரும்பத்தக்கன என்று எனக்குப் புலப்படுவது போன்றே உங்கள் அறிவிலும் ஒளிவிடும் என்பது ய யதி. “எவரைச் சாக்கிட்டாகிலும் பொது மக்கள், நல்ல தன்மைகளையும் நற்குணங்களையும் அடிக்கடி கேள்விப்பட்டால் அதனால் நற்பலன் ஏற்படாமல் போகாது. "அவர்கள் தங்களை அறியாமலே திருந்திவிடுவார்கள். 'எனவே, வாழ்த்தியலைப் பின்பற்றுங்கள். அதையே கற்றுத் தாருங்கள். "நூறு முறை வாழ்க என்று முழங்கிடினும் அயர்வு தோன்றுவது இல்லை; மாறாக நான்குமுறை ஒழிக!' என்று முழங்கிப் பாருங்கள். களைப்பு மேலிடும். “என்னிடம் காட்டிய வாழ்த்தியலை உங்கள் மாணாக்கரிடம் பின்பற்றுங்கள். உங்கள் பூட்டன் படித்தானா? பாட்டன் படித்தானா? உங்கள் அப்பன் படித்தானா? நீ படிக்க உனக்கு படிப்பு வராது’ என்று திட்டி, அவநம்பிக்கையை வளர்த்துவிடாதீர்கள். “மாறாக உண்மை அல்லாவிடினும் 'நீ நன்றாகப் படிக்கிறவனாயிற்றே! இன்று ஏன் தயங்குகிறாய்? கவனமாகப் பார்த்துப் படி முதல் முறை வராவிட்டால், இரண்டாவது மூன்றாவது முறை பாட ம்ேறும் என்று சொல்லி, அனைவரையும் வாக்குவியுங்கள். "நமக்கு வேண்டியது ஆண்மை தரும் கல்வி என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவில் வையுங்கள். "கல்வி நிலையங்கள் இடுப்பொடிக்கும் இடங்களாக இருப்பது மாறி, தன்னம்பிக்கை வளர்க்கும் பண்பாட்டுக் கூடங்களாக ஒளிரட்டும். தன் சிந்தனைக்கும் தன் முயற்சிக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தல், கவனத்தில் இருக்கட்டும்.” - இப்படி ஆசிரியர்களை அனைத்து, திசை திருப்பி அழைத்துச் சென்றேன். பொதுமக்களுக்கு என் செய்தி பொதுமக்களுக்கு நான் கொண்டு சென்ற செய்தி என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/109&oldid=787894" இலிருந்து மீள்விக்கப்பட்டது