பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நினைவு அலைகள் “தாய்க்குலமே! பெரியோர்களே! இந்த நாடு நம் அனை வருக்கும் உரியது; இந் நாட்டின் எல்லாப் பதவிகளுக்கும் எவரும் உயர உரிமையுண்டு “வாய்ப்பு உண்டா?” என்பதுதான் கேள்வி. "அது நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொறுத்தது. “சுதந்தரம் எப்படி நமது பிறப்புரிமையோ, அப்படியே கல்வியும் நமது பிறப்புரிமை “சுதந்தரப் போராட்டத்தைவிடப் பல மடங்கு கடுமையானது, கல்வி பெறுதல். கடுமையானது என்பதனால், கலக்கம் கொள்ளாதீர்கள். 'கற்பதிலும் முயற்சிக்கு ஏற்ற நல்ல பலன் உண்டு. ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி “உங்கள் பையன்களையும் பெண்களையும் பள்ளிக்கு அனுப்புங்கள்; படிக்கச் சொல்லுங்கள், ஆசிரியர்களைக் காணும்போது, அவர்களை மதித்து உங்கள் பிள்ளைகளின் படிப்பு நிலைபற்றி அவர்களிடம் கேளுங்கள். "அப்படிக் கேட்பது ஆசிரியர்களுக்குத் தெம்பூட்டும். இதைத் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளும் ஒழுக்கத்துடன் நடந்து நெறிப்படுவார்கள். "கன்னிப் பயிரும் கொள்ளை விளைச்சல் கொடுக்கும் - எப்போது? "கன்னிப் பயிர் என்பதை உணர்ந்து, கவனமாகக் காத்துப் பயிரிட்டால், “ஊர் விவகாரம், கட்சி விவகாரம் இவற்றை வயது வந்த நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். "படித்து முடிக்கும்வரை பிள்ளைகளை அவற்றில் தள்ளி விடாதீர்கள். "கடைக்குப் போய் அரிசி வாங்கிவர சோம்பற்பட்டு, வீட்டிலுள்ள விதை நெல்லைக் குத்திச் சாப்பிடலாமா? 'கடைகளில் அரிசி கிடைக்குமளவு விதை நெல் கிடைக்காது என்பது நமக்கெல்லாம் தெரியுமே! “மக்கள் குலத்தின் விதை நெற்களாகிய இளைஞர்களையும் இளம் பெண்களையும் நம்முடைய அன்றாடச் சிக்கல்களுக்குள் சிக்க வைக்காதீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/110&oldid=787895" இலிருந்து மீள்விக்கப்பட்டது