உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - நினைவு அலைகள் மதுரை மாவட்டம் திருமங்கலம் நாடார் உறவின் முறை ஆண்கள் உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. எம் அருணாசலம் ஆகியோர், குழுவின் உ றுப்பினர்கள். காந்தியவாதியாகிய திரு. கே. அருணாசலம் பிற்காலத்தில் அனைத்திந்திய கதர் ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்று விளங்கினார். - - - மேலும், தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தார். == மாநில முதியோர் கல்வி வாரியத்தின் உறுப்பினர்: திண்டுக்கல்லுக்கு அருகில் சாணார்பட்டி ஒன்றியத்தில் முதியோர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். திரு. எம். அருணாசலம் ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற்று உள்ளார். சமுதாயத்தின் நன்மதிப்பை உரிமையாக்கிக் கொண்டுள்ளார். o திரு. கோபாலகிருஷ்ண அய்யர், மூத்த நன்மதிப்பைப் பெற்ற, திறமையான, தலைமையாசிரியர். . - அவர் பணியில் இருந்தபோது, ‘தேசிய விருது' திட்டம் - வரவில்லை. - -- 1. எனவே, நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் மதிப்பே அவருக்குத் தேசிய விருதாக அமைந்தது. i. திரு. மீனாட்சிசுந்தர முதலியார், எல்லாரிலும் மூத்தவர். வயதில் மட்டும் அல்ல, நீண்ட கல்வித் தொண்டில்கூட! சிவகங்க்ை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பல்லாண்டு தலைமையாசிரியராக விளங்கினார். ஒய்வுபெற்றபின், ஈரோட்டில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ஒருமுறை நகர்மன்றத் தலைவர்ாகச் செயல்பட்டார். -- மேற்கூறிய கல்வி ஆய்வுக் குழுவின் பெயர் "தொடக்கப் பள்ளிக்கான உயர்நிலைக் குழு.” குழுவின் பணி அதற்குப் பணிக்கப்பட்ட வேலை என்ன? அன்றைய தமிழ் மாநிலத்தில், தொடக்கக் கல்வியின் நிலவரம் 7 «TaßTößT? = * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/116&oldid=787901" இலிருந்து மீள்விக்கப்பட்டது