பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 . நினைவு அலைகள் வாய்ப்புகள் குறைந்த காலத்தில் கல்வித் துறையின் க ைப் படிக்கட்டில் பணி தொடங்கிய அவர், தொடக்கப் பள்ளி ஆய்வாளராக, மாவட்ட ஆட்சிக் குழுவின் கல்வி அதிகாரியாக அலுவல் பார்த்து, பல்வகையான மனிதர்களைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். குழுவின் செயலாளராகத் திரு. எஸ். வடிவேலுப் பிள்ளையின் பெயரைப் பரிந்துரைத்தவர், திரு. தி. க. அவினாசிலிங்கம் செட்டியார். அவரது நல்ல எண்ணத்தைப் பெற்றவர் என்பதைவிடச் சிறப்பு வேண்டுமா? கலந்துரையாடல் தொடக்கக் கல்விக் குழு அன்றைய சென்னை மாகாணத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, பல நிலைக் கல்வியாளர்களைக் கண்டு, கலந்துரையாடியது. வடமேற்கே, தென் கன்னடம் மாவட்டம் முதல், தெற்கே திருநெல்வேலி மாவட்டம் வரை கண்டு, கேட்டு வந்தது; முதலில் சென்று பார்வையிட்டது, சேலம் மாவட்டக்கையே அகற்கக் காரணம் உண்டு. அன்றைய சேலம் மாவட்டம் இன்றைய த்ருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களையும் உள்ளடக்கிய பெரிய மாவட்டம்; பெரும் நிலக்கிழார்களைக் கொண்டது; இந்திய தேசிய காங்கிரசின் தொடக்க காலம் முதல், விடுதலை இயக்கத்தில் ஆர்வம் காட்டியது

  • அன்ைத்திந்திய காங்கிரசின் தலைவராகிய திரு. விஜய

ராகவாச்சாரியரைப் பெற்றெடுத்த மாவட்டம். மூதறிஞர் தலைவர் இராஜாஜி பிறந்த மாவட்டம். பெருநிலக்கிழார், டாக்டர் சுப்பராயனையும், தென்னாட்டுத் திலகர் டாக்டர் வரதராசுலு நாயுடுவையும் பெற்ற உன்னதமான மாவட்டம் ஆகும். அதியமான் ஆண்ட பகுதியும் ஆகும். o கனிவளமும், காட்டு வளமும், வயல் வளமும், மலை வளமும் உழைப்புக்குச் சுணங்காத மக்கள் வளமும் கொண்ட சேலம் மாவட்டம் எழுத்தறிவில் கடைசி இடத்தில் இருந்தது. --- == அன்று நூற்றுக்குப் பத்தப் பேர்களே எழுத்தறிவு பெற்றவர்கள். - - - இன்று எல்லோரும் எழுத்தறிவு பெறும் வகையில் சிற்றுார் தோறும் பள்ளிகள் ஏற்பட்டு விட்டாலும், சேலத்தில் இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/118&oldid=787903" இலிருந்து மீள்விக்கப்பட்டது