உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Mlésé கல்வி உயர்நிலைக் ՖԱԶ 79 பிரிக்கப்பட்ட தருமபுரி மாவட்டப்பகுதி. இன்றும் பின் தங்கியதாகவே இருக்கிறது. - மருத்துவம், பொறியியல் கல்லூரிச் சேர்க்கையில் இம் மாவட்டத்திற்கே அநேகமாகக் கடைசி இடம். -- காலம் காலமாகப் பின்தங்கி வரும் சேலத்திற்குச் சென்றோம். நிர்வாகிகள், ஆசிரியர் கழகங்கள், மக்கள் பேராளர்கள் ஆகியோரைக் கலந்து கருத்துகளைப் பெற்றோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டப் பேராளர். Һstr//wл இரண்டொருவரைக் குழுவில் இணைத்துக் கொள்ளும்படி அரசு உரிமை கொடுத்திருந்தது. அதன்படி, சேலம் 'மாவட்டத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் βφ கே. எஸ். சுப்பிரமணிய கவுண்டரையும் கோவை சி. எஸ். இரத்தினசபாபதி முதலியாரையும் ஈரோடு அருள்திரு. _ாட்மனையும் இணைத்துக் கொண்டோம். சிந்தனையாளன், எதையும் பல கோணங்களிலிருந்து பார்த்து மதிப்பிடும் பழக்கத்தைச் செம்மையாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இயல்பாகவே, எதிரும் புதிருமான கருத்துகளைக் கேட்டுப் புடம்போடும் குணமுடைய எனக்கு, அக் குழுவின் கலந்துரைபாடல்கள், சுவையான பால் சோறாக அமைந்தன. பலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளப்போன எங்கள் பெச்சைக் கேட்க விரும்பியவர்கள் பலர் ஆவர். ஆங்காங்கே நாங்கள் உரையாற்ற ஏற்பாடு செய்தார்கள். அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று இன்றும் என் இதயத்தில் பசுமையாக உள்ளது. விழுப்புரம் அரசினர் ஆண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் எங்களை அழைத்துப் பேசச் சொன்னார்கள்.எங்களை வரவேற்றுப் பேசியவர், _"ஏணி தோணி, ஆசிரியர் மற்றவர்களுக்கு உதவுவன. ஆனால் இருந்த நிலையில் இருப்பன” என்று வேதனையோடு பேசினார். அவ்வுரை பொடிபோல் நெடியாக இருந்தது. பிறகு நான் பேசினேன். "ஆசிரியர்கள் வைர வணிகர்களுக்கு ஒப்பானவர்கள்! வைரத்தின் மதிப்பு சாதாரணக் குடிமகனுக்குத் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/119&oldid=787904" இலிருந்து மீள்விக்கப்பட்டது