உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராட்டுத் தேனிர் விருந்து B3 "அதை நன்றாகப் புரிந்துகொண்டு பொதுமக்களுக்குக் கேள்வி ஞானம் கொடுக்க முயலும் உங்களை ஆண்டவன் காப்பாராக வய்தில் மூத்தவன் என்ற உரிமையோடு உங்களை வாழ்த்துகிறேன்” என்றார் அந்த நல்லவர். அவரோடு தொடர்பை நீடித்துக் கொள்ளாதது என் குறை. அவர் 'அய்யர்' என்றது மட்டுமே நினைவிற்கு வருகிறது. சரபோஜி கல்லூரியில் என் படம் சரபோஜி கல்லூரி, அரசின் நிர்வாகத்திற்குள் வருவதற்கு முன்பே அந்தக் கல்லூரி மண்டபத்தில் என் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கச் செய்தார் திரு. இராமலிங்கசாமி. அதைத் திறந்து வைத்து என்னைப் பெருமைப்படுத்தியவர் திருவாளர் டி. எம். நாராயணசாமி பிள்ளை. அப்போது சரபோஜி கல்லூரியின் முதல்வர், திரு.முருகையன். இவர்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் கடன்பட்டவர்கள் அல்லர். சென்னை சர். தியாகராயர் கல்லூரியைப் போன்றே சரபோஜி கல்லூரியினரும் எனது மொத்தமான பொதுத் தொண்டைப் போற்றி, என்னைப் பெருமைப்படுத்தினார்கள். இந்தச் சிறப்புகளை நான் தேடியவன் அல்லன்! பற்றற்ற தன்மையால், அப்படிப் பற்றற்ற துறவியாக விலகி நின்றேனா? இல்லை. "புகழ் என்னும் நல்லாள் தேடுவாரை விட்டு ஒடுவாள்; ஒடுவார் பின்னால், விடாது தொடர்வாள்' என்று ஆங்கிலக் கவிஞன் ஒருவன் பாடினான். அது என் நெஞ்சில் ஆழப்பதிந்திருந்தது. புகழ் தேடுதல், பொய்மான் வேட்டைக்கு ஒப்பாகும். எனவே, புகழைத் தேடி அலுக்கவில்லை. வலிய வரும் வம்பு பற்றித் துவண்டுவிடவில்லை. பாராட்டுத் தேனி விருந்து பார்ாட்டு என்ற தோற்றத்தில், சங்கடம் ஒன்றை நான் வழிப்பட நேர்ந்தது. மணஞ்சேரி, கந்தசாமி முதலியார் என்பவரைப் பற்றி ஏற்கெனவே குறித்து உள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/123&oldid=787908" இலிருந்து மீள்விக்கப்பட்டது