உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நினைவு அலைகள் சரபோஜி கல்லூரி தொடக்கம் தஞ்சையில் நடக்கும் சரபோஜி ஆண்கள் கல்லூரியைத் தமிழக அரசு இப்போது நடத்தி வருகிறது. அதைத் தொடங்கியது அரசல்ல; பொதுமக்களே! தஞ்சை சுழற்சங்கம் (ரோட்டரி சங்கம்) முன் கையெடுத்து உதவ, மாவட்டஆட்சித் தலைவரின் (திரு. சி. ஏ. இராமகிருஷ்ணன், ஐ. சி. எஸ். அப் பொறுப்பில் இருந்தபோது) தலைமையில் ஒரு கல்லூரிக் குழு அமைத்து - தனியார் துறையில் சரபோஜி கல்லூரி 1957 வாக்கில் தொடங்கப்பட்டது. திரு. இராமலிங்கசாமி, கல்லூரிக் குழுவின் செயலராக விளங்கினார். சரபோஜி கல்லூரியின் தொடக்கவிழா, முதல் அமைச்சர் காமராசரால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. விழாவிற்கு வந்தோர் பல்லாயிரக் கணக்கில். --- விழாவில் உரையாற்றும் பேற்றினை எனக்கு அளித்தார்கள். கல்லூரி விழாவாக இருந்தபோதிலும் நான் தமிழில் நீண்ட உரையாற்றினேன். m நீதிபதியின் பாராட்டு விழாவின் இறுதியில் பந்தலில் முன் வரிசையில் அமர்ந்திருந்த அய்ம்பது வயதுக்கு மேற்பட்டவர் என்று மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் விரைந்து வந்தார். “நான் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரன். இப்போது பீகாரில் பணிபுரியும் அய். சி. எஸ். நீதிபதியாகப் பணி புரிகிறேன். விடுமுறையில் இங்கு வந்து இருக்கிறேன். “உங்கள் பேச்சை இன்று கேட்பதற்கு முன்பு வரை, 'பொதுக்கல்வி இயக்குநர் என்ற அந்தப் பதவியின் பெயரை கல்வி இயக்குநர் என்று அழைத்தால், கச்சிதமாக இருக்குமே” என்று எண்ணுவேன். “உங்கள் பேச்சைக் கேட்டபின், பொதுக்கல்வி இயக்குநர் என்ற பெயரே பொருத்தம் என்று படுகிறது. எவ்வளவு அழகான தமிழ்; அதே நேரத்தில் பொது மக்களுக்கும் புரியும் தமிழ். “நம் நாடு உள்ள நிலையில், கல்வி வளர்ச்சி என்பது பொது மக்கள் விழிப்பையும் எழுச்சியையும் சார்ந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/122&oldid=787907" இலிருந்து மீள்விக்கப்பட்டது