பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BT 10. பாராட்டுத் தேனி விருந்து சேலம் டி. எம். காளியண்ணன் தொடக்கக் கல்விக் குழு, பல தரப்பினரையும் கண்டு கேட்டு, கருத்துகள்ைத் திரட்டியது. ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோரோடு கலந்துரையாடியது போன்றே, தொழிலதிபர்களைக் கண்டு பேசியது; பொதுமக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடியது. சேலம் மாவட்டக் குழுவின் அப்போதைய தலைவராக விளங்கிய திரு. டி. எம். காளியண்ணன் எம். காம். பி. எல். அவர்களிடம் கலந்துரையாடியதுபோல, மேட்டுர் சென்று தொழிலதிபர்கள் சிலரைக் கண்டு பேசியது. - திரு. காளியண்ணன் நல்லபெயர் எடுத்த மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவர்களில் ஒருவர். காங்கிரசின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் பல்லாண்டு பணி புரிந்தவர். நாட்டுப்புற மக்கள்பால் - ஏழை எளியவர்கள்பால் நலிவுற்றோர்.பால் - பரிவு கொண்டவர். கல்வித்துறையின் புதிய திட்டங்களாகிய, பகல் உணவுத் திட்டம், சீருடைத் திட்டம், பள்ளிச் சீரமைப்பு இயக்கம் ஆகியவற்றிற்கு ஆர்வத்தோடு கூடிய ஆதரவு தந்தவர். இந்திய சோவியத் நட்புறவு இயக்கத்தின் ஆதரவாளர் என் இனிய நண்பர். ா, இக் குழு தஞ்சைக்குச் சென்றபோது பாரிஸ்டர் இராமலிங்கசாமி அவர்களை, உறுப்பினராக இணைத்துக் கொண்டது. தஞ்சை இராமலிங்கம் திரு. இராமலிங்கசாமயும் அழகப்ப செட்டியாரும் இலண்டனில் பாரிஸ்டர் படிப்பை ஒன்றாகப் படித்தவர்கள். இராமலிங்கசாமி, எங்கள் குழுவிற்குத் துணையாக இருந்தார்: முதன்முதல், அப்போது எனக்கு அறிமுகமான அந்த அறிஞர், வாழ்நாள் முழுதும் என்னிடம் நம்பிக்கையும் பாசமும் கொண்டி ருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/121&oldid=787906" இலிருந்து மீள்விக்கப்பட்டது