உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆவதா? 87 அவ்வேளைகளில் வேறொருவரிடம் ஆதாரக் கல்விப் பொறுப்பை விட்டுவிட அவர் விரும்பவில்லை. உடனடியாகக் கவனிக்க வேண்டியவற்றை மட்டும் நானே பார்த்து ஆணையிடலாம். மற்றவை அவருக்காகக் காத்திருக்கட்டும் என்பது அரசி ஆனை. இந்நிலை அவ்வளவு நல்லதல்ல. எனினும், அவருடைய மனம் புண்படக்கூடாது என்பதற்காக அவ்வேற்பாட்டை ஏற்றுக்கொண்டேன். மூன்று சக்கரங்களில் ஒடும் காரின் நிலைக்கு இசைந்தேன். 11. தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆவதா? நகரசபை வரவேற்பு தொடக்கக் கல்விக் குழுவின் தலைவரான, டாக்டர் அழகப்ப செட்டியார் என்னிடம் மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். அந்தக் குழுவின் பேட்டிகளின்போது, நான் உடனிருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விழைந்தவர். எனவே, அவரே என்னோடு பேசி என் வசதிக்கேற்பப் பயணங்களுக்குத் திட்டமிட்டு என்னுடைய இசைவைப் பெற்றுச் செயல்பட்டு வருவார். அப்படிக் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்ட போதிலும் இரண்டொரு பயணங்களில் நான் பங்கு கொள்ள இயல்வில்லை. அதில் ஒன்று ஒருநாள் காலை, டாக்டர் அழகப்பர், தொலைபேசி வாயிலாக என்னோடு தொடர்பு கொண்டார். “இயக்குநரே! நல்ல செய்தி. காஞ்சிப் பெரியவாள் நம் குழுவினைக் காணப் பெரிய மனது பண்ணியிருக்கிறார். குறிப்பிட்ட அந்நாள் காலை, சிற்றுண்டிக்குப் பின் காரேறிச் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்வோம். “பெரியவாளைக் கண்ட பிறகு, பிற்பகல் அங்கு இருந்து சாலை வழியாக, திருவண்ணாமலைக்குச் செல்வோம். அங்கு இரவு தங்குவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/127&oldid=787912" இலிருந்து மீள்விக்கப்பட்டது