உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நினைவு அலைகள் "மறுநாள் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சார்பில் சிலரைக் கண்டு, கலந்து உரையாடுவோம். “திருவண்ணாமலையில் இருந்து சில நண்பர்கள் என்னிடம் வந்துள்ளார்கள். அவர்கள் உங்களைக் காண வருகிறார்கள். பத்து மணித்துளிகளில்அங்கு வந்து விடுவார்கள். தயவுசெய்து அதுவரை வீட்டில் பொறுத்திருங்கள். “திருவண்ணாமலை நகர மன்றத்தின் சார்பில், தொடக்கக் கல்விக் குழுத் தலைவனாகிய எனக்கும் பொதுக்கல்வி இயக்குநராகிய உங்களுக்கும் வரவேற்பு இதழ் அளிக்க விரும்புகிறார்கள். “அந்தச் செய்தியைச் சொல்லி, தங்கள் ஒப்புதலைப் பெற, அங்கு வருகிறார்கள். தயவுசெய்து அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். "அய்யா! நான் தங்களோடு பேசுவதற்குத் தொலைபேசியண்டை வந்து கொண்டிருந்தேன்; நான் கூப்பிடுவதற்கு முன்பு தாங்கள் கூப்பிட்டு விட்டீர்கள். "காஞ்சிபுரம், திருவண்ணாமலை பயணத்திற்காகக் குறிப்பிட்ட நாள்களில் நான், இந்திய அரசு புதுதில்லியில் கூட்டியுள்ள கல்வி இயக்குநர் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அது பற்றிய செய்தி, நேற்றிரவுதான் எனக்குக் கிடைத்தது. அதைச் சொல்லி அந்த நாள்களில் பயணம் வைத்துக்கொள்ள வேண்டாமென் JD/ வேண்டிக் கொள்ள நினைத்தேன். "பரவாயில்லை. பெரியவாள் பார்ப்பதற்கு ஒப்புக் கொண்ட நேரத்தில் அங்குச் செல்வதே முறை. நான் வர இயலாதது பற்றி, என்னை மன்னித்துவிடுங்கள். “மற்றொன்று: அரசு ஊழியத்தில் இருப்பவர்கள் நகர்மன்றம் போன்ற அமைப்புகளிடம் வரவேற்புப் பெறுவது முறையல்ல; எனவே, தங்களுக்கு மட்டும் வரவேற்பு கொடுக்கட்டும்.” "அப்படியானால், காஞ்சிபுரம் சென்று பெரியவாளைப் பார்த்துவிட்டு வருகிறோம். அப்புறம் நீங்களும் வரக்கூடிய நாளில் திருவண்ணாமலைக்குச் செல்வோம். “அதற்கிடையில், நானே அரசு மட்டத்தில் பேசி, திருவண்ணா மலை நகர மன்றம் உங்களுக்கு வரவேற்புக் கொடுப்பதில் தடையில்லை என்று ஆணை வாங்கி விடுகிறேன்” என்றார். "அப்படி முயற்சி செய்யவேண்டாம். என்னைச் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். ஏற்கெனவே திட்டமிட்டபடி குழுவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/128&oldid=787913" இலிருந்து மீள்விக்கப்பட்டது