பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆவதா? 89 அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை போய்வாருங்கள்” என்று அவரிடம் வேண்டினேன். டாக்டர் அழகப்பர் தயக்கத்தோடு ஒப்புக் கொண்டார். சமய போதனை பற்றிப் பெரியவாளிள் கருத்து அப்படியே குழுவின் தலைவரும், பிற உறுப்பினர்களும் காஞ்சிபுரம் சென்றனர். பெரியவரிடம் உரையாடினர். ‘சமய-நீதி-போதனை பற்றிப் பெரியவாளின் கருத்தைக் கேட்டார்கள். "இளமைப் பருவத்தில் எல்லாப் பையன்களுக்கும் பெண்களுக்கும் தத்தம் சமய போதனை கொடுக்க வேண்டும். அது மிக முக்கியம். "ஆனால், பள்ளிக்கூடங்களில் சமய போதனை செய்வதால் எதிர்பார்க்கும் பலன் ஏற்படாது. ஏன்? “பிற பாடங்களைப்போல், சமயக் கல்வியும் அதில் நம்பிக்கையில்லாதவர்கள் - கிளிப்பிள்ளைகளைப்போல் - சொல்லிக் கொடுக்கும் நிலைக்கு வீழ்ந்துவிடும். நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லிக் கொடுப்பது மனத்தில் பதியாது. விரக்தியை ஏற்படுத்தும். அதனால் நன்மைக்குப் பதில் தீமையே விளையும். “ஆகவே, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சமயவாதிகள் தத்தம் சமயக் குழந்தைகளுக்குச் சமய போதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் பெற்றோர்கள் அக்கறை கொள்ள வேண்டும்.” இப்படி, காஞ்சிப் பெரியவாள் கருத்துத் தெரிவித்ததாக, அடுத்த கூட்டத்தில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தொடக்கக் கல்விக்குழு என்ன உணர்வோடு செயல்பட்டது? “தாங்கள் பெரியவர்கள்; எல்லாம் தெரிந்தவர்கள், தாங்கள் செய்யப் போகும் பரிந்துரைகள் கல்விப் புரட்சியை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணத்தில் செயல்பட்டதா? புலி அடித்ததைவிடக் கிலி அடித்தது அதிகம் இல்லை! பல தரப்பினரையும் கேட்டுத் தெரிந்து கொண்ட பின், பெரும்பான்மையோர் ஏற்று ஒத்துழைக்கக்கூடிய கல்வி அமைப்பையும் கல்வி உட்பொருளையும் உருவாக்குவதற்கான பரிந்துரைகளைச் செய்வோம்’ என்ற ஆர்வத்தோடு குழு இயங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/129&oldid=787914" இலிருந்து மீள்விக்கப்பட்டது