உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95r-5sé sósi grt-Gsm-sota 2...ST? 93 உயிரையே மாய்த்துவிடும். வளர்க்க வேண்டியவர்கள் வழக்குகளில் மாட்டிக் கொள்ளக்கூடாது. 1. 'நாட்டுடைமையை நம் குழு ஆதரிக்கவேண்டாம்" இது நான் எடுத்த நிலை. பலருக்கும் வியப்பு இது பலருக்கு வியப்பை ஊட்டியது. "நீங்கள் சமதர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் என்று எண்ணி இருந்தோம்” என்று வியப்போடு கீழ்க் குரலில் சிலர் கூறினர். அப்புறம் பூசி மெழுக முயலவில்லை. “எல்லோரும் வாழ வேண்டும்; நன்றாக வாழ வேண்டும் என்பது என் விழைவு எல்லோரும் வேலை பெற வேண்டுமென்பது என் குறிக்கோள். “சமதர்ம முறையின் கீழ்தான் அது இயலும் என்பது என்னுடைய அசையாத நம்பிக்கை “பிற தொழில்கள் நாட்டுடைமையாக்கும்போது கல்விப் பணியும் நாட்டுடைமையானால், அது பாதுகாக்கப்படும். “பிற தொழில்கள் - பெரும்பாலும் - தனியார் துறையில் இயங்கி, ஆதாயம் குவிக்கும்போது, கல்வியை மட்டும் நாட்டுடை மையாக்கிவிட்டால், கல்வி நிலையங்களில், வேலை நடக்காது. அமைப்புகளின் கீழ் இயங்கும் ஒவ்வோர் பள்ளியும் பல திண்ணைப் பள்ளிகளைப் பெற்றெடுக்கும், அப்புறம் - "ஆசிரியர்கள் வீடுகளிலோ பெரியவர்களின் பங்களாக் களிலோ தனிப்பாடம் மட்டுமே நடக்கும். கல்வி நிலையங்கள் பாடம் சொல்லித்தராத, சிறைக்கூடங்களாக மாறிவிடும். “கல்வி என்ற பெயரில் பொதுப்பணம் பாழாவதே பலனாகும், சாதாரண மக்கள் படிப்பில் முன்னேற முடியாது. “ஆசிரியர்களுக்குத் தனியாகக் காசு பணம் கொடுக்கக் கூடியவர்கள் மட்டும் படித்து முன்னேறுவார்கள். இருக்கிற கொஞ்சம் கல்வியைக் கெடுப்பதற்கு மட்டுமே, இப்போதைய சூழலில் நாட்டுடைமையாக்குவது உதவும்.” இப்படி விளக்கினேன். எவரும் மறுத்துச் சொல்லவில்லை. மெளனம், ஒப்புதல்’ என்று எண்ணினேன். என் தோழர்களின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக நினைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/133&oldid=787918" இலிருந்து மீள்விக்கப்பட்டது