பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நினைவு அலைகள் இறுதிக்கூட்டம் சென்னை டாக்டர் அழகப்பர் இல்லத்தில் நடப்பது என்றும், அன்று பரிந்துரைகளைத் தொகுத்து அறிக்கையாக்கிக் கையெழுத்திடுவது என்றும் முடிவு செய்தது. அக் குழு பரிந்துரைகளைத் துண்டு துண்டாக அவ்வப்போது என்னிடம் காட்டினர். அவற்றில் சிலவேளை சில சில்லறைத் திருத்தங்கள் செய்தேன். o நாட்டுடைமை பற்றி எவ்விதப் பரிந்துரையும் என் பார்வைக்கு வரவில்லை. அதைக் கைவிட்டு விட்டிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். == என் கருத்துக்கு மாறாக குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட நேரத்தில் டாக்டர் அழகப்பர், பங்களாவில் கூடினோம். எல்லா உறுப்பினர்களும் வந்திருந்தனர். --- குழுத்தலைவர், என்னை மட்டும் தனியே ஒர் அறைக்கு அழைத்துப்போனார். "தங்களிடம் தனியாக, மனம் விட்டுச் சில சொல்ல விரும்புகிறேன். "எல்லாப் பள்ளிகளையும் அரசு நிர்வாகத்தில் கொண்டுவர தங்களைத் தவிர மற்ற எல்லா உறுப்பினர்களும் விரும்புகிறார்கள். “என்னைப் பொறுத்தமட்டில் இதில் நான் நடுநிலைமை வகிக்கிறேனென்பது உங்களுக்குத் தெரிந்ததே. "ஒரே ஒருவர் எதிர்க்கிறார் என்பதற்காக அத்தகைய ஆலோசனை பற்றி மெளனம் சாதிப்பது சரியல்ல என்று உ mப்பினர்கள் வேதனைப்படுகிறார்கள். “உறுப்பினர்களில் ஒருவர், அய்க்கிய நாடுகளின் அவையில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் நாடு போன்ற வல்லரசுகளுக்கு ரத்து (வீடோ) உரிமை இருப்பதுபோல் நம் குழுவில் இயக்குநருக்கு ரத்து உரிமை கொடுக்கப் போகிறீர்களா?’ என்று சினத்தோடு” கேட்டுவிட்டார். “பெரும்பான்மையோர் நாட்டு உடைமைக்கு ஆதரவாக இருப்பதால் அப்படி ஒரு பரிந்துரை செய்ய விரும்புகிறோம். அதற்குத் தாங்கள் ஒப்புதல் கொடுங்கள்’ என்றார் டாக்டர் அழகப்பர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/134&oldid=787919" இலிருந்து மீள்விக்கப்பட்டது