உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 12. காமராசரின் பகல் உணவுத் திட்டம் நன்றி கூறினார் கல்வி அமைச்சர் தொடக்கக் கல்விக் குழுவின் சார்பில், டாக்டர் அழகப்ப செட்டியார், கல்வி அமைச்சர் மாண்புமிகு சி.சுப்பிரமணியம் அவர்களிடம் அறிக்கையை அளித்தபோது நானும் குழுவின் செயலர் திரு. எஸ். வடிவேலு பிள்ளையும் உடன் இருந்தோம். “அமைச்சர், எங்கள் பரிந்துரையைப் புரட்டிப் பார்த்தார். "தனியார் நிர்வாகத்தை ஒழித்துவிட்டு எல்லாப் பள்ளிகளையும் அரசுடைமை யாக்கும்படி பரிந்துரை ஏதும் இல்லாதது, அவர் கவனத்திற்கு வந்திருக்கும். அவரே, சென்னையில் பெரிய நிகழ்ச்சி ஒன்றில் குறிப்புக் காட்டியும் அப்படிச் செய்யாதது பற்றி, மாண்புமிகு சி.சுப்பிரமணியம் ஏமாற்றமோ எரிச்சலோ சிறிதும் கொள்ளவில்லை. பரிந்துர்ைகளைப் பொறுமையாகப் படித்துவிட்டு, அரசு ஆலோசனைகளை ஆய்ந்து முடிவு எடுக்கும்; குழுவின் முயற்சிகளுக்கு நன்றி என்று இனிமையாக விடை கொடுத்து அனுப்பினார். அக் குழுவின் பரிந்துரைகள், வேறு ஆலோசனைகளுக்கு வித்துகள் ஆயின. நாட்டுப்புறத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில மொழி, கற்பித்தல் கட்டாயம் இல்லை. பல பள்ளிகள் ஆங்கிலத்தைக் கற்பிப்பதும் இல்லை. கற்பிக்கும் தகுதி பெற்ற ஆசிரியர்கள்கூட அப் பள்ளிகளில் இல்லை. அப்படிக் கற்பித்தால் ஆறாம் வகுப்பிலிருந்தே கற்பித்தார்கள். நகரப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளியில் அவ்வாறே இணைந்துள்ள நான்காம் வகுப்பிலிருந்து ஆங்கில்ம் கற்றுக் கொடுக்கப்பட்டது. தொடக்கப் பள்ளி மாணாக்கர், எட்டாவது வகுப்பின் இறுதியில், கல்வித்துறை நடத்தும் பொதுத் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். ஆங்கிலத்திலும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால், அம் மாணாக்கர், உயர்நிலைப் பள்ளியின் ஒன்பதாவது வகுப்பில் சேரும் தகுதியைப் பெறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/135&oldid=787920" இலிருந்து மீள்விக்கப்பட்டது