பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - நினைவு அலைக்ள் தனியார் நிர்வாகத்தினிடமிருந்து பள்ளிகளை எடுத்துவிடக் கூடாதென்று கோரி, பாதுகாப்புத் தேடிக் கொள்ள மாநாடு கூட்டினார்கள். கல்வி அமைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றித் தங்களையும் கலந்தே முடிவு எடுக்க வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். அம் மாநாடு சிறப்பாக நடந்தது. மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் அய்ந்நூறு பேராளர்கள் வந்திருந்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும் தென்னாட்டுத் திலகர் என்று புகழ் பெற்றவரும் தமிழ்நாடு’ நாளிதழை நடத்திப் பொருள் இழந்தவரும் 1952ஆம் ஆண்டு ப்ொதுத் தேர்தலில், சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு, காங்கிரசின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான டாக்டர் பி. வரதராசுலு நாயுடு தலைமை ஏற்றார். சென்னை மாநகரில் ஒர் உயர்தொடக்கப் பள்ளியின் நிர்வாகியான திரு. ஏ. ஆர்.சேஷாசலம் வரவேற்புக்குழுத் தலைவர். காமராசர் தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் காமராசர், மாநாட்டைத் தொடங்கி ல்ைத்துப் பெருமைப்படுத்தினார். பொதுக்கல்வி இயக்குநராகிய நான், அந்த மாந்ாட்டில் சிறப்பாையாற்ற அமைக்கப்பட்டேன். பகல் உணவுத் திட்டம் காமராசரின் ஆலோசனை - மாநாட்டு மேடையில் மாண்புமிகு காமராசரின் அருகில்,' அமர்ந்திருந்தேன். வரவேற்பு உரை ஆற்றுகையில், முதலமைச்சர் என்னோடு பேச்சுக் கொடுத்தார். பேசாமலிருக்க முடியுமா? - 'நீங்கள், சென்னை மாநகராட்சியில் கல்வி அலுவலராக இருந்தீர்கள் அல்லவா?” ஆமாம்" Tr று கூறினேன். “எத்தனை ஆண்டுகள் இருந்தீர்கள்?” “மூன்று ஆண்டுகள் அய்யா!' 1. “மாந்கராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு போடுகிறார்களே, அதனால் ஏதாவது பலன் உண்டா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/137&oldid=787922" இலிருந்து மீள்விக்கப்பட்டது