பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசரின் பகல் உணவுத் திட்டம் - - 99 'உண்டுங்க” “என்ன பலன்?” 'வருகை அதிகமாகும் பலன் அய்யா' “எப்படிச் சொல்லுகிறீர்கள்?" “பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை, பகல் உணவு போடுகிறார்கள். அந் நாள்களில் வருகை நன்றாக இருக்கும். “சனிக்கிழமை அரை வேளைப் 'பள்ளி என்ற சாக்கைச் சொல்லி, அன்று சாப்பாடு போடுவதில்ல்ை. சனிக்கிழமைகளில் வருகை பாதியாக வீழ்ந்துவிடும். 'மதிய உணவு கொடுத்தால் ஏழை எளியவர்களை அதிகமாகப் பள்ளிக்கு இழுக்கலாம் அய்யா” இந்த நீண்ட பதிலுக்குப் பிறகு, “மதிய உணவு பேர்ட, என்ன செலவாகிறது?’ என்று முதலமைச்சர் என்னைக் கேட்டார். "சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றரை அனா செலவாகிறது அய்யா” என்றேன். அப்போது, அனா நாணயமே பழக்கத்தில் இருந்தது. காசு கணக்கு இல்லை. “ஒன்றரை அணா என்பதற்கு ஏதாவது அடிப்படை உண்டா? அவவளவுதான் அவர்களால் ஒதுக்க முடியுமென்பது நியாயந்தானா?” என்று முதல்வர் காமராசர் கேட்டார். இதே கேள்வியை, நான் மாநகராட்சிப் பணியில் இருந்தபோது கேட்டுத் தெளிவு பெற்று இருந்தேன். ஆகவே, தயங்காமல் பதில் கூற முடிந்தது. "சென்ற சில ஆண்டுகளாகவே, படி அரிசி பத்தனாவுக்கு விற்கிறது. ஒருபடி அரிசி சமைத்தால், அந்த வயதுப் பிள்ளைகள் பத்துப் பேர் வயிறார உண்ணலாம். அப்படியென்றால் ஒரு பிள்ளைக்கு அரிசிச் செலவு ஒரு அணா. "சாப்பாட்டிற்குச் சாம்ப்ாரும் மோரும் உண்டு. காய்கறி உட்பட சமையல் பொருள்களுக்கும் அதை மொத்தமாகச் சமைத்து, பள்ளிகளுக்குக் கொண்டு போய்க் கொடுக்கவும் செலவு சராசரி அரிசிச் செலவில் பாதி. "இது சரியான கணக்காவென்று இராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் முதலாளியும், என் காலத்தில் சென்னை மாநகராட்சி உறுப்பினரும்ான, இராமநாத அய்யரிடம் விசாரித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/138&oldid=787923" இலிருந்து மீள்விக்கப்பட்டது