உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுநர் பிரகாசாவின் அரிய கருத்து 103 நம்மவர்களைத் தட்டி எழுப்ப வேண்டிய அளவுக்கு அது இன்னும் எ(மப்பவில்லை. "அதேபோல், கல்வி மக்கள் பிறப்பு'உரிமை. அதற்கு ஆவன எல்லாம் செய்வோம்” என்ற அந்த் அறிவிப்பு, கற்றோர் நடுவில் கலக்க மூட்டியது 'முன்னர் படித்தோர்’ ‘முன்னர் செல்வாக்குப் பெற்றோர்” என்ற ஆதாயத்தை உடையவர்கள் ஆத்திரங்கொண்டனர். சென்னையிலிருந்து வெளிவந்த ஒர் ஆங்கில நாளிதழ் இதைக் குறிப்பிட்டுக் கண்டனத் தலையங்கம் எழுதிற்று. ‘ஏற்கெனவே, மக்கள் வரிச் சுமையால் அவதிப்படுகிறார்கள். அப்படி இருக்க, மதிய உணவு போடுவதற்கு என்று, மேலும் ஒரு வரி எவ்வளவு சிறிய அளவிலாயினும் விதிப்பது சமுதாயத்தின் முதுகெலும்பை முறித்துவிடும். சமுதாயத்தின் பொருளியல் நிலையை வளர்த்தால், மற்றதெல்லாம் சரியாகிவிடும்” என்று எதிர்ப்பு தெரிவித்தது. மக்களிடமிருந்து விலகியே வாழ்ந்து, மக்கள் தேவைகள் என்ன என்பதைப் புரியாமல், பெரியவர்கள் சீட்டாட்டக் கிளப்' மனப்பான்மையில் எழுப்பிய, பொறுப்பில்லாத எதிர்ப்பை ஆதரிக்க வந்தோர் வெகுசிலரே 13. ஆளுநர் பிரகாசாவின் அரிய கருத்து கல்வி வளர்ச்சி - அதற்குத் துணையாக, பள்ளிப் பகல் உண்வுத் திட்டம் - இவற்றிற்கான ஐந்தாண்டுத் திட்டம் தீட்டும் வாய்ப்பு வந்தது. குற்றமேதும் சொல்ல முடியாதபடி, அத் திட்டம் அமைந்தது. அத்தகைய நற்பணியிலும் எவர் எவருடைய பகையோ, கைம்மாறாகக் கிட்டிற்று. அவற்றை விவரிப்பதற்கு முன்பு, மற்றோர் . நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்ல வேண்டும். அந் நிகழ்ச்சி காலத்தாலும் முந்தியது; எனவே, முன்னுரிமை உடைப_து. ஆளுநர் தேனி விருந்து 1955 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் இந்தியக் குடியரசு நாள்; மகிழ்ச்சியூட்டும் அந் நாளில், வழக்கம்போல், கிண்டி 'இராசபவனத்தில் ஆளுநர் தேனிர் விருந்தளித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/142&oldid=787927" இலிருந்து மீள்விக்கப்பட்டது