உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 o நினைவு அலைகள் என் மனைவி காந்தம்மாவும் நானும் அவ் விருந்திற்குச் சென்றிருந்தோம். விருந்தின்போது, ஆளுநர் மேதகு பூரீபிரகாசா விகந்தினர். களைக் கண்டு, கை குலுக்கி, உரையாடி மகிழ்வித்தார். அப்படிப் பலரையும் பார்த்து, கை குலுக்கி வருகையில், நாங்கள் நின்றுகொண்டிருந்த பக்கம் வந்து சேர்ந்தார். ஆளுநருடன் வந்த அவரது மெய்க்காப்பாளர் என்னை நெருங்கியதும், “நெ. து. சுந்தரவடிவேலு, புதிய பொதுக்கல்வி இயக்குநர்” என்று என்னை அறிமுகப்படுத்தினார். ஆளுநர், பூரீபிரகாசா, புன்முறுவல் பூக்க, மகிழ்ச்சி பொங்க, என் கையைப் பிடித்து, சில மணித்துளிகள் குலுக்கினார். குலுக்கும்போது, ‘மந்திரவாதி”போல், என் முகத்தையே சில கணம் உள் m நோக்கினார். அந்தப் பார்வையில் கடுமை இல்லை.இனிமை தவழ்ந்தது; அன்பு வழிந்தது. "இயக்குநரே இவ்வளவு பெரிய பொறுப்பிற்கு வந்தவர்களில் நீர்தான் மிக்வும் இளைஞராக இருப்பீர்போல் தோன்றுகிறது. உங்கள் காதில் ஒரு கருத்தைப் போட்டு வைத்தால், அது வேலை செய்து, பலனளிக்கப் போதிய காலம் இருக்குமென்று நம்புகிறேன். அதைச் சொல்லலாமா?” என்று அளகநர் நம்பிக்கையோடு கேட்டார். "தங்கள் மேலான கருத்திற்குக் காத்துக் கிடக்கிறேன்” என்றேன். மனப்பாட முறை தேவை சுற்றிப் பலர் நின்று வேடிக்கை பார்க்கையில், ஆளுநர் பூரீபிரகாசா என்னைப் பார்த்து, “நம் கல்வி முறைபற்றி எத்தனையோ குறைபாடுகளை நீங்கள் கேட்கப் போகிறீர்கள். அதில் ஒரு குறையை நான் கூறப் போகிறேன். இந்தியக் கல்வியில் குறைகளைக் களைந்து எடுப்பது அவ்வளவு எளிது அல்ல. "இருப்பினும் குறைகளில் எல்லாம் பெருங்குறையாக எனக்குத் தோன்றுவது, இக் காலப் பாடமுறையில் மனப்பாடப் பகுதி குறைந்து போயிருப்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/143&oldid=787928" இலிருந்து மீள்விக்கப்பட்டது