பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

systğ!si ulirorensilsör sifuu sq5ğgu 105 “கல்வியின் நோக்கம், வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவதே! வாழ்க்கை நீண்டது; வகைவகையான வாய்ப்புகளைக் கொண்டு வந்து எதிரில் நிறுத்தக்கூடியது. அதேபோன்று எந்தெந்த மூலைகளில் இருந்தோ வேதனைகளைத் தள்ளி, வழி மறித்து நிற்பது. ஆளுநராக இருக்கும் என்னைப் பற்றி வியப்போர் ஏராளம்! போற்றுவோர் பலர்! பொறாமைப்படுவோரும் இருப்பர். எல்லோருக்கும் இருப்பதுபோல, எனக்கும் பொறுப்புகள், தொல்லைகள், வேகனைகள் உண்டு என்பது உலகிற்கத் தெரியாக. “பிறருக்குத் தெரியாது என்பதால், என் வேதனையின் கனம், அதன் குடைச்சல் குறைந்துவிடுமா? “துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையிலும், வாழ்ந்து கடமை ஆற்றுவதோடு, கலகலப்பாகப் பேச எனக்கு உதவி செய்வது எவை? “என் மாணவப் பருவத்தில், நான் மனப்பாடம் செய்து கொண்ட சுலோகங்கள், கவிதைகள், பாட்டுகள்! அவை ஏராளம்! “அவை வாழ்க்கையின் மேடுபள்ளங்களைக் கண்ட அறிஞர் பெருமக்கள் மனித குலத்துக்கு வழங்கிச்சென்ற மகத்தான செல்வம். “என்னைத் துக்க மேகம் கெளவும்போது, அப் பாடல்களில் ஒன்று நினைவில் மின்னுகிறது. அதை எனக்குள் ஒப்புவித்துக் cTSCCTSLLST TT TT S eeTTS TTT SLLLLSeeHHHH TS TTTTT TT “என் காலத்தில் படித்தவர்கள் அனைவரும், நிறைய மனப்பாடம் செய்து கொண்டதால், என் தலைமுறையினருக்கு ஒன்று இல்லாவிட்டால் பிறிதொன்று, நினைவுக்கு வந்து அவர்கள் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாகப் பயன்படுகிறது. பாவம் இந்தக் கால் மாணவர்க்க உயிர்க் காற்றான அந்தப் பகுதியைக் குறைத்துவிட்டீர்கள். “பிற்காலத்தில் இவர்களில் ஒருவரை எவராவது அடுத்துக் கெடுத்தால், எப் பாடலை நினைவுக்குக் கொண்டுவந்து தன்னைத் தேற்றிக் கொள்வர்? தேடாமல் வந்து அடையும் துன்பங்களை மறக்க எதைப் பாடுவர்? “மனப்பாடப் பகுதியே கல்வி அல்ல! மனப்பாடம் செய்யத் தூண்டாத கல்வியும் நிறைவான கல்வியல்ல! ஆழ்ந்த கருத்தமைந்த அறிஞர் பெருமக்களின் அனுபவத்தில் விள்ைந்த பாடல்களை மனப்பாடம் செய்யாத குறையே இந்தக் காலக் கல்வியின் பெருங்குறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/144&oldid=787929" இலிருந்து மீள்விக்கப்பட்டது