உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நினைவு அலைகள் “இதைப்பற்றி நீர் சிந்தியும்; சிறிதளவாவது சீரமைக்க முடிந்தால், மனப்பாடப் பகுதியைச் சேர்த்துவிடும்” இப்படி பூரீபிரகாசா, என்னையும் பொருட்படுத்திச் சில மணித்துளிகள் நின்றபடியே என்னோடு பேசினார். அருமையான சிந்தனை ஒன்றைத் தூண்டிவிட்டார். இது எதிர்பாராத நிகழ்ச்சி, திட்டமிடாத நிகழ்ச்சி! நானாகத் தேடிக் கொள்ளாத நிகழ்ச்சி தனி வாழ்வில் நன்மையும் தீமையும் தேடிவருவதைவிட, தாமே வங்க மோதுவதே அதிகம் என்பது அன்று எனக்குத் தெரியாது. ஆளுநர் அவ்வளவு அன்னியோன்யமாகப் பேசியதைப் பற்றி மகிழ்ந்தேன். மகிழ்ச்சிக்கு இடையிலும் சிந்தித்தேன் மீண்டும் மீண்டும் சிந்தித்தேன். கல்வி பற்றி அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களில் கிடைக்காத வெளிச்சம், தெளிவு, வழிகாட்டல் ஆகியன பட்டறிவு மிக்க ஆளுநர் ஒருவரோடு சில மணிக்களிகள் பேசியகில் கிடைக்கக. ஆம்! எண்ணும் எழுத்தும் கண்கள்! கல்வி நிலையங்களில் பெறும் தொழில்திறன், பேச்சுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவை ஆதாயமானவை கற்றோரும் கல்லாதவரும் மனப்பாடம் செய்தவரே மனப்பாடம் செய்தவை, வைப்பு நிதி ஆகும். தள்ளாமைக்கு ஊன்றுகோல்! நெஞ்ச நோய்க்குச் சஞ்சீவி! பட்டிக்காட்டு ஊர்கள் என் நினைவுக்கு வந்தன. குடிசை வாழ் மக்கள் எனது கண் முன் நின்றார்கள். மேட்டுக்குடி மக்களின் திண்ணைகளும், போட்டி போட்டுக் கொண்டு என்னுடைய மனக்கண்முன் நின்றன. இதோ மனத்திரையில் ஒடிய காட்சிகளில் ஒன்று. குளிர்காற்றுத் தொல்லை இல்லாத பக்கம், குடிசையோரம் உட்கர்ந்து இருப்போர் மூவர். மூவரும் கிழவர்கள். ஒருவருக்கும் எழுத்தறிவு கிடையாது. ஆனால், அவர்களில் ஒருவரான 'தம்பிரான் ஏதோ ஒப்புவிக்கிறார். மற்ற இருவரும் அதைக் கேட்டுத் தலை அசைக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/145&oldid=787930" இலிருந்து மீள்விக்கப்பட்டது