உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aboshi பிரகாசாவின் அரிய கருத்து 107 அவ்வப்போது இருவரில் ஒருவர், “அதை மறுபடியும் பாடு அண்ணே!” என்று கேட்கிறார். அதைக் கேட்ட தம்பிரானுக்குக் கொள்ளை இன்பம். எந்தப் பரிசையும் பெற்றிராத, கேள்விப்பட்டிராத தம்பிரான், வாழ்க்கையில் பெறவேண்டியதை எல்லாம் பெற்றுவிட்டதுபோல், பூரிக்கிறார். மீண்டும் தெம்போடு பாடுகிறார். எதைப் பாடுகிறார்? அரிச்சந்திரன் நாடகப் பாடல்களை! அது பல நாள் நீடிக்கும். அது முடிந்த பிறகு, பாரதக் கதைப் பாட்டுகள் பல நாள் தம்பிரானுக்குத் தெரியாவிட்டால் வேறொருவருக்குத் தெரியும்.அவரை அழைத்துப் பாடவைத்துக் கேட்பார்கள். இப்படி, வாழ்க்கையின் தள்ளாத பருவத்தை அதிக தொல்லைசூழாமல், இனிமையாக ஒட்டுவார்கள். மேட்டுக்குடித் திண்ணைகளிலும் மேற்கூறியதன் சிறப்புப் பதிப்பே. சிறு வேறுபாடு இருக்கலாம். அங்கே, எப்போதோ மனத்தில் பதிய வைத்த பாடல்களை ஒப்புவிப்பவர் தற்குறியாக இருக்கமாட்டார். ஒரளவு கல்வி கற்றவராக இருப்பார். பாமரராயினும் படித்தவராயினும் முற்காலத்தவர் காது வழியோ, கண்வழியோ மனப்பாடம் செய்துவைத்த இருந்தார்கள். அந்தப் பாடல்கள் அவர்களுடைய முதுமைக் காலத்தில் அவர்களுக்குத் துணை நிற்கின்றன. அந்த ஆதாயம் இல்லாவிட்டால், நம் நாட்டு முதியவர்களின் அந்திய கால வாழ்க்கை, இப்போதைக் காட்டிலும் அதிகப் பொருமலில், பெரும் ஏக்கத்தில், கவலையில் சிக்கித்தவிக்க கேர்ந்திருக்கும். மனப்பாடம் செய்தல், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில், பரவலாகப் பயிரிடப்பட்ட திறமை, எழுத்தறிவு பெறாதவர்களும் பெற்ற மகத்தான திறமை. இதை வளர்த்தலில் கேடில்லை. வளர்த்தலே நன்மை கல்வியின் மையமாக அதைக் கொள்ளாது, கெட்டியான விளிம்பாக அதை ஊக்குவித்தல் அறிவு உடைமை என்று எனக்குப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/146&oldid=787931" இலிருந்து மீள்விக்கப்பட்டது