உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நினைவு அலைகள் எனவே, ஆளுநர் பூரீபிரகாசாவின் கருத்தினை, தமிழ்நாட்டில் மூலைமுடுக்கு எல்லாம் விதைத்தேன். பயன் விளைந்ததா? -"இளமைப் பருவமே, மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற பருவம் அப் பருவத்தில். உங்கள் பாடத் திட்டங்களில் வந்தாலும் வராவிட்டாலும், பண்புள்ள, தெம்பூட்டும் பல பாடல்களை நீங்களாகவே கற்று மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். “அவை இன்றைக்குப் பயன் இல்லாமல் போகலாம். நாளை பயன்படுவது உறுதி. முதுமைக்கு அது மிகச்சிறந்த நன்மருந்தாக உகவும். “நாளை விட்டேர்டு முடங்கி உட்காரும் பருவத்தில், அறிவு அசைபோட, அப் பாடல்கள் பயன்படும். “நூறு நாள்களுக்குப் பிறகு பயன்படக்கூடிய விதையை இன்று நடுவது போல், முதுமைக்குப் பயன்படக்கூடிய பாடல்களை இளமையில் ஆழமாக விதைத்து வையுங்கள்.” இப் பாணியில் நான் உரையாற்றுவேன். பொது மக்களின் முகங்கள் ஒப்புதலை ஒளிவிடும். மூத்த ஆசிரியர்களின் தலைகள் ஆடி, ஒப்புதல் அளிக்கும். இளைய ஆசிரியர்கள் வியப்பர். மாணாக்கர், மேலும் சுமையா? என்று திகைப்பர். - எவரும் எதிர்ப்பு எழுப்பாதது என் நற்பேறல்ல. பின் என்ன? "நாட்டத்தில் கொள்ளப் போவதில்லை என்பதன் நுட்பமான அறிகுறி. அது விரைவில் எனக்குப் புரிந்தது. அதை எண்ணி எண்ணி ஏக்கப்பட்டு இருந்தால், எப்போதோ முறிந்து போய் இருப்பேன். என்னை அறியாமலே, நான் இளமையில் மனப்பாடம் செய்தது, எனக்குத் துணை நின்றது; நிற்கிறது; நிற்கும். 'கற்றவர்கள்கூட, தத்தம் குடும்பங்களில் சிறுவர் சிறுமியரைப் பண்படுத்தும் பாடல்களை மனப்பாடம் செய்யப் போதிய அளவு துரண்டுவதில்லை’ என்பது என் மதிப்பீடு. அதனால் மனந்தளரவில்லை. நாளும் நல்லதை நினைத்தலும் சொல்லுதலும் என் கடன் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/147&oldid=787932" இலிருந்து மீள்விக்கப்பட்டது