உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை பங்காளர் காமராசர் 109 "கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ள ரடி - கிளியே! நாளில் மறப்பாரடி' என்ற பாரதியின் வாய்மை வாக்குமூலத்தை நினைவில் கொள்வேன்; அதிர்ச்சி குறையும். பாரதியை அடியொற்றி வந்த பாரதிதாசன் கண்டதுதான் দুTaঠাদ্ধা? 'விழுங்கு உணவை விழுங்குதற்கும் உணர்ச்சியற்றார்’ என்றல்லவா நம்மை எடை போட்டுள்ளார்? அப்படியிருக்க, 'ஆளுநர் பூரீபிரகாசாவின் கருத்தையோ, அதை நீ பர்ப்பியதையோ கேட்டதோடு, காலம் ஒடிவிட்டதே' என்று நான் புலம்புவதில் பயன் இல்லை. “இன்றுபுதிதாய்ப்பிறந்தோம் என்றுநீவிர்! எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு தின்றுவிளையாடிஇன்புற் றிருந்துவாழ்வீர்!” தீமையெலாம் அழிந்துபோம், திரும்பிவாரா" என்ற பாரதியாரின் வரிகளும் முன்னே வந்து நின்று, அவ்வப்போது ஒரு நிலைப்படுத்தின; படுத்துகின்றன! 14. ஏழை பங்காளர் காமராசர் முன்னர் அறிவிக்காமல், திடீரென வந்து நிற்பவர்களையும் பார்த்து அனுப்புவது எனது பழக்கம். - பொது அலுவலர், எந்த அளவிற்குப் பலரைக் காணவும் கேட்கவும் பக்குவப்பட்டிருக்கிறாரோ அந்த அளவிற்குத் தமது அலுவலில் அவரால் வெற்றி காணவும் முடியும். சென்னை மாநிலக் கல்வித்துறையின் முதல் தொண்டனாகவே நினைத்துச் செயல்பட்ட என்னிடம், பலதரப்பினரும் உரிமையோடு வந்தனர். நம்பிக்கையோடு உரையாடினர். ஏழாயிரம் பண்ணைத் தியாகி 1955ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூவர் வந்தனர். பெரிய மர்லையோடு வந்து பணத்தை வீணாக்கியதைப் பொறுத்துக் கொண்டேன். அவர்கள் உரையாடல் தொடங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/148&oldid=787933" இலிருந்து மீள்விக்கப்பட்டது