பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை பங்காளர் காமராசர் 111 உதவி புரிவீர்கள்’ என்பது எங்களுக்கு முன்பே தெரியும். மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் மேல் தப்பெண்ணம் வேண்டாம்” என்றார், ஏழாயிரம் பண்ணைத் தியாகி. 'முதலமைச்சர் சொல்லுவதற்கு உரிமை உடையவர். அவர் சொன்னால் எப்படித் தவறாகக் கொள்வது! ஒரு வகையில் அது என் கைகளை மேலும் வலுப்படுத்த உதவும். 'நீங்கள் முதலமைச்சரிடம் முதலில் கோரிக்கைவிட்டதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். “ஊரின் பின்னணி, பள்ளியின் நிலை முதலியவற்றைக் காட்டி நிதி உதவி கோரும் கடிதம் ஒன்றை அனுப்பி வையுங்கள். முடிந்த அளவு உதவுகிறேன்” என்று பதில் அளித்தேன். அமைதி பெற்ற செயலர், ஒரு தாளை நீட்டினார்."இதில் எழுதி உள்ளது போதுங்களா? வேறு எழுதி அனுப்பட்டுமா?’ என்று கேட்டார். கொடுத்த விண்ணப்பத்தைப் படித்தேன். போதிய தகவல்கள் இருந்தன. எனவே “அது போதும்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினேன். முதலமைச்சரின் விருப்பம் என்ன? விண்ணப்பத்தில் கையெrமக்கிட்டு, அலவலகக் கோப்பக்க அனுப்பினேன். முதலமைச்சரின் குறிப்பை எதிர்பார்த்தேன். அவரிடம் இருந்து எவ்விதக் குறிப்பும் வரவில்லை. 'ஏழாயிரம் பண்ணைக்கு உதவுவதை விரும்புவாரா? மாட்டாரா?” இந்தக் கேள்விகள் மின்னின குழம்பினேன். முதலமைச்சரின் தனி அலுவலரை எங்கோ காண நேர்ந்தது. 'இராமநாதபுரம் மாவட்ட உயர்நிலைப் பள்ளி எதையாவது பற்றி முதலமைச்சர் சொன்னாரா?” என்றேன். “முதலமைச்சர் எதுவும் சொன்னால், குறிப்பு வைத்துக் கொண்டு அதை உடனுக்குடன் உங்களுக்குத் தெரிவிப்போம்” என்றார் ஏறத்தாழ இரு திங்கள் காத்திருந்தேன். எத்தகைய குறிப்பும் வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/150&oldid=787935" இலிருந்து மீள்விக்கப்பட்டது