பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நினைவு அலைகள் காமராசரைச் சந்தித்தேன் இடைக் காலத்தில் சில நிகழ்ச்சிகளில் முதலமைச்சருக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். ஆனால் ஏழாயிரம் பண்ணையின் கோரிக்கை பற்றி அவரிடம் கேட்க எனக்குத் துணிவில்லை. தியாகராயநகர் பள்ளியில் காமராசர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று துணிவு வந்து விட்டது. அது எங்கே? எப்படி? சென்னை, தியாகராயநகரில், தியாகராயநகர் உயர்நிலைப் பள்ளி என்று ஒன்று நடந்து கொண்டிருந்தது. அது, குலசேகரன் பட்டினம் செ. தெ. நாயகம் என்னும் நல்லோரால், அவரது அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இப்போது அது இரு விழுதுகளாகச் செயல்படுகிறது. ஆண்களுக்கு என்று ஒரு மேனிலைப் பள்ளியாகவும் பெண்களுக்கென்று வேறொரு பள்ளியாகவும் நடந்து வருகிறது. 1955இல் அந்த உயர்நிலைப் பள்ளியில் அண்களோடு பெண்களும் சேர்ந்து ஒன்றாகப் படித்தார்கள் அப் பள்ளியின் அப்போதைய தாளாளர், திரு.டி.வி. கமலசாமி. அவர் நாடாளுமன்ற மேலவையின் சுயேச்சை உறுப்பினர். என் கல்லுர்ரி நண்பர். விக்டோரியா மாணவர் விடுதித் தோழர். உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும்படியும் மாணவ மாணவியருக்குப் பரிசுகளை வழங்கும்படியும் முதலமைச்சர் காமராசரைக் கமலசாமி அழைத்தார். அவரும் இசைந்தார். அந்த நல்ல செய்தியைச் சொல்லி, என்னைத் தலைமை தாங்க அழைத்தார். அவ்வேளை எனக்கு வேறு நிகழ்ச்சிகள் இல்லை. ஒப்புக் கொண்டேன். விழா நேரத்திற்குச் சில மணித்துளிகள் முன்னதாகவே பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தேன். தாளாளர் தலைமை ஆசிரியர்களோடிருந்து, முதலமைச்சரை வரவேற்று அழைத்துச் சென்றேன். மேடையில் அமர்ந்தோம். அடுத்த நொடி முதலமைச்சர், எனக்கு மட்டும் கேட்கும்படி மெல்லப் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/151&oldid=787936" இலிருந்து மீள்விக்கப்பட்டது