பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை பங்காளர் காமராசர் 113 விரைந்து செல்ல வேண்டும் "கடைசிவரை நான் இருப்பதற்கு இல்லை. நான், பரிசளித்து விட்டு, சில சொல்லிவிட்டுப் போகிறேன். நீங்கள் விழா முடிவுவரை இருந்து, பின்னால் விரிவாகப் பேசுங்கள்” என்றார் நான் தலையாட்டினேன் முக்கால் பங்கினர் நலிந்தோர் விழா, கடவுள் வாழ்த்தோடு தொடங்கிற்று. அடுத்து வரவேற்புரை. பின்னர் தலைமையாசிரியரின் அறிக்கை. அதைக் கவனமாகக் கேட்டார் திரு.காமராசர். அதில் அடங்கிய ஒரு தகவலைக் கேட்டதும், சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார். “இந்தப் பள்ளியில் படிக்கிறவர்களில் முக்கால் பங்கினர், ஆதிதிராவிட பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள்’ என்று சொல்லுகிறாரே! இது சரியாக இருக்குமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான், தாளாளர் கமலசாமியிடம் விவரம் கேட்டேன். கமலசாமி, காமராசர் காதோடு பேசினார். என்ன சொன்னார்? “தக்கார்பாபா விடுதியில் தங்கியிருக்கும் அத்தனை பேர்களும் எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள். அதோடு தியாகராய நகர் பங்களாக்களில் எடுபிடி வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்கும் இது புகலிடம்” என்றார் கமலசாமி. “இப்ப விளங்குது. பங்களாவாசிகள் படிக்கும் பள்ளிகளில் அவர்களின் வேலைக்காரர்களின் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்காது என்பது?” என்று காமராசர் முடித்தார். இறுதி வரை இருந்தார் இத் தகவல், முதலமைச்சர் காமராசரின் மனத்தை மாற்றிவிட்டது. அறிக்கைக்குப்பின், பரிசளிப்பு விழா ஒழுங்காக நடந்தது. திரு.காமராசரின் சுருக்கமான பொருள் செறிந்த உரை இனிது முடிந்தது. அவர் கிளம்பவில்லை. - 'கலை நிகழ்ச்சியைத் தொடங்குங்கள். தலைவர் இறுதியில் உரையாற்றுவார்” என்று காமராசரே அறிவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/152&oldid=787937" இலிருந்து மீள்விக்கப்பட்டது